»   »  ஸ்ரீதேவி மரணம்... அதிர்ச்சியில் பிரபல நடிகைகள்! #ActressSridevi

ஸ்ரீதேவி மரணம்... அதிர்ச்சியில் பிரபல நடிகைகள்! #ActressSridevi

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா? | Filmibeat tamil

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

இதேபோல அவரது மறைவுக்கு திரைப்பட நடிகைகள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

த்ரிஷா

த்ரிஷா

வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கௌதமி

கௌதமி

அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

சுஷ்மிதா

சுஷ்மிதா

ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜெயப்ரதா

ஜெயப்ரதா

ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று நடிகை ஜெயப்ரதா தெரிவித்துள்ளார்.

English summary
The film industry is in gret shock after heard the death news of Sridevi and many actresses have expressed their condolences.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil