»   »  ஏஆர் ரஹ்மான் இசையில் மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் 'மாம்'!

ஏஆர் ரஹ்மான் இசையில் மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் 'மாம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவு கன்னியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்', 'புலி' படங்களின் மூலமாக தனது நடிப்பைத் தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது 'மாம்' (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார்.

Sridevi's trilingual Mom

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தை வரும் ஜூலை மாதம் 14ம் தேதி ஜீ ஸ்டுடியோஸ் உலகமெங்கும் வெளியிடுகின்றது.

English summary
Veteran actress Sridevi's new trilingual movie Mom will be released on July 14.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil