»   »  என்னால் தான் முடியலை, என் மகள்களுக்காவது அந்த பாக்கியம் கிடைக்கட்டுமே: ஸ்ரீதேவி

என்னால் தான் முடியலை, என் மகள்களுக்காவது அந்த பாக்கியம் கிடைக்கட்டுமே: ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படித்து முடித்த பிறகு தனது மகள்கள் நடிக்க நினைத்தால் நடிக்கட்டும் என்று நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு ஸ்ரீதேவி சினிமா படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ்

படம் கடந்த 2012ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

நமக்கு இப்படி ஒரு படம் கிடைக்காமல் போனதே என்று பல சீனியர் நடிகைகள் ஏங்கும் அளவுக்கு இங்கிலீஷ் விங்கிலீஷ் மக்களை கவர்ந்தது.

புலி

புலி

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆன ஸ்ரீதேவி புலி படம் மூலம் கோலிவுட் திரும்பியுள்ளார்.

ஜான்வி

ஜான்வி

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தாயின் வழியில் நடிகையாகப் போவதாக கூறப்பட்டு வருகிறது. ஜான்வி அந்த நடிகையின் மகனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார், இந்த

நடிகரின் மகனுக்கு ஜோடியாகிறார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

படிப்பு

படிப்பு

நான் தான் சிறு வயதில் நடிக்க வந்ததால் என்னால் படிக்க முடியாமல் போனது. என் மகள்கள் ஜான்வியும், குஷியும் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்கிறார் ஸ்ரீதேவி.

நடிப்பு

நடிப்பு

என் மகள் ஜான்வி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அவர் வெளிநாடு சென்று படிக்க உள்ளார். இளைய மகளுக்கு இப்போது தான் 15 வயது ஆகுகிறது. அவர்கள் படித்த முடித்த பிறகு நடிக்க விரும்பினால் அதற்கு நான் தடைபோட மாட்டேன் என்று ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

English summary
Sridevi wants her daughters Jhanvi and Khushi to complete their studies before choosing a career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil