»   »  3 மாதமாக கணவருடன் பேச்சே இல்லை: உண்மையை சொன்ன ஸ்ரீதேவி

3 மாதமாக கணவருடன் பேச்சே இல்லை: உண்மையை சொன்ன ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாம் படத்தில் நடித்தபோது 3 மாதங்களாக தனது கணவருடன் பேசவே இல்லை என்று ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம். ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மாம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இது ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும். படத்தை அவரது கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

மாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, போனி கபூர், அவர்களின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கணவர்

கணவர்

மாம் படத்தில் நடித்தபோது நான் மூன்று மாதங்கள் என் கணவர் போனிஜியுடன் பேசவே இல்லை. காலையில் குட்மார்னிங் சொல்வேன், ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது குட் நைட் சொல்வேன். அவ்வளவு தான் நான் அவருடன் பேசியது என்று ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நான் இயக்குனரின் நடிகை. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதே போன்று நடிப்பேன். மாம் படத்தில் ரவி சொன்னதை கேட்டு நடித்தேன். அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்கிறார் ஸ்ரீதேவி.

புதுசு

புதுசு

நான் நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்றும் புதுமுகம் போன்றே உணர்கிறேன். என்னால் முடிந்த வரை பல படங்களில் நடிக்க முயற்சி செய்கிறேன் என ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

English summary
Recently at the trailer launch of her upcoming film Mom, Sridevi made a shocking revelation that left everyone surprised! She revealed that she ignored her husband Boney Kapoor for almost three months.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil