»   »  பாகுபலி படத்தில் ஏன் நடிக்க மறுத்தேன்?: ஸ்ரீதேவி விளக்கம்

பாகுபலி படத்தில் ஏன் நடிக்க மறுத்தேன்?: ஸ்ரீதேவி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் இன்னும் பாகுபலி படத்தை பார்க்கவில்லை என்று பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். மேலும் சிவகாமியாக நடிக்க மறுத்தது குறித்தும் பேசியுள்ளார்.

சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி 2012ம் ஆண்டு வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் திரும்பி வந்தார். இந்நிலையில் அவர் மாம் இந்தி படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஸ்ரீதேவி பிசியாக உள்ளார்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக நடிக்குமாறு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டார். அவர் மறுக்கவே அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நான் இன்னும் பாகுபலி படத்தை பார்க்கவில்லை. நான் சிவகாமியாக நடிக்க மறுத்ததை பெரிய விஷயமாக்கி பேசுகிறார்கள். ஆளாளுக்கு ஒரு காரணத்தை கற்பனையாக கூறுகிறார்கள் என்றார் ஸ்ரீதேவி.

காரணம்

காரணம்

சிவகாமியாக நடிக்க மறுத்ததற்கு காரணங்கள் உள்ளது. பாகுபலி படம் இரண்டு பாகமும் வெளியான பிறகு ஏன் நடிக்கவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவி தெரிவித்தார்.

படங்கள்

படங்கள்

நான் பல படங்களில் நடிக்க மறுத்துள்ளேன். அதை பற்றி ஏன் யாருமே பேசுவது இல்லை? பாகுபலி பற்றி மட்டும் ஏன் பேசுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீதேவி.

English summary
Sridevi has said that she has her own reasons for refusing to act in SS Rajamouli's magnum opus Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil