»   »  'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி?

'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் தான் நடித்த காட்சிகளில் பலவற்றை நீக்கியுள்ளதால் ஸ்ரீதேவி கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் மூலம் ஸ்ரீதேவி பல காலம் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. படத்தில் நடிக்க ஹீரோயின்களான ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோரை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சிம்புதேவன் மீது ஸ்ரீதேவி கோபமாக இருப்பது தெரிய வந்துள்ளது.


டப்பிங்

டப்பிங்

ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருக்கு டப்பிங் பேச ஆள் தேடியுள்ளார் சிம்புதேவன். இது குறித்து அறிந்த ஸ்ரீதேவி எனக்கு டப்பிங்கிற்கு ஆள் எதற்கு நானே பேசுகிறேன் என்றுள்ளார்.


காட்சிகள்

காட்சிகள்

ஸ்ரீதேவி தான் நடித்த காட்சிகளுக்கு இரண்டே நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளார். டப்பிங் பேசுகையில் தான் தான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதை தெரிந்து கொண்டார்.


கோபம்

கோபம்

நான் அத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தால் நீங்கள் பல காட்சிகளை எனக்கு தெரியாமல் எதற்காக நீக்கினீர்கள் என்று சிம்புதேவனிடம் ஸ்ரீதேவி கேட்டுள்ளார்.
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

புலி படத்தில் ஸ்ரீதேவி கெட்ட ராணியாக நடித்துள்ளாராம். தான் பார்த்து பார்த்து நடித்த காட்சிகளில் பலவற்றை இப்படி நீக்கிவிட்டார்களே என்ற போகத்தில் உள்ளாராம் ஸ்ரீதேவி.


English summary
Buzz is that Sri Devi is angry with director Chimbudevan for removing most of her scenes from the movie Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil