»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
காதல் கோட்டை என்ற மாபெரும் ஹிட் படத்தை வழங்கிய தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்- இயக்குனர்அகத்தியன் கூட்டணி சேர்ந்து உருவாக்கிய அடுத்த படமான ராமகிருஷ்ணா எப்போது வெளிவருமோ என்றுகன்னத்தில் கைவைத்தபடி காத்துக் கொண்டிருக்கிறார் அதில் நடித்த ஸ்ரீதேவிகா.

அடுத்த ஸ்ரீதேவி மாதிரி வருவார் என்று இவரை அறிமுகப்படுத்திய அகத்தியனுக்கே இந்தப் படம் எப்போதுரிலீஸ் ஆகும் தெரியாத சூழல்.

கேரளத்தைச் சேர்ந்த புதுமுகமான ஸ்ரீதேவிகா- ஜெய் ஆகாஷை (இலங்கையைச் சேர்ந்த இவர் வளர்ந்தது எல்லாம்லண்டனில். முதலில் தெலுங்கில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தவர்) போட்டு படத்தைத் தயாரிக்க ஆரம்பித்ததில்இருந்தே பலவிதமான தொல்லைகள். பட்ஜெட்டும் எகிறிக் கொண்டே போக சிவசக்தி பாண்டியன் திணறிப்போய்விட்டார்.

படத்தை ஒரு வழியாக முடித்துவிட்டுப் பார்த்தால், ரிலீசுக்குத் தேவையான பணம் கையில் இல்லை. இதையடுத்துதனது விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரை விற்றுப் பணம் தர முன் வந்தாராம் ஹீரோ ஜெய் ஆகாஷ். ஆனால்,வேண்டாம் என்று மறுத்துவிட்டார் சிவசக்தி பாண்டியன் என்கிறார்கள்.

இப்போது ராமகிருஷ்ணா படத்துக்கு இன்னொரு பிரச்சனை. இதை நல்ல விலைக்கு வாங்க வினியோகஸ்தர்கள்தயாராக இல்லை.

சிவசக்தி பாண்டியனே, ஆரம்பத்தில் குத்தக்ைகு தியேட்டரை எடுத்து நடத்தி, பின்னர் வினியோகஸ்தர் ஆகி,தயாரிப்பாளர் ஆனவர் தான் என்றாலும், அவரது கஷ்டத்தைப் புரிந்து கொள்ள சக வினியோகஸ்தர்கள் தயாராகஇல்லை.

இது இப்படி இருக்க ஜெய் ஆகாஷ் தனது தொடர்புகள், வசதியை வைத்து அடுத்தடுத்து செவ்வேல் உள்பட சிலபடங்களில் ஹீரோ ரோலைப் பிடித்துவிட்டார்.

ஆனால், இதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவிகா தான் மிகவும் நொந்து போய் இருக்கிறார். அதே போல இதில்ஜெய் ஆகாசுக்கு இன்னொரு ஜோடியாக நடித்த வாணியும் வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருகிறார்.

ராமகிருஷ்ணாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவிகாவின் ஹோம்லி முகத்தைப் பார்த்து நல்ல ரோல்களைவழங்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முன் வந்தனர்.

கிட்டத்தட்ட 25 பேர் வரை இவரை அப்போது அணுகினர். ஆனால், சம்பள விஷயத்தில் யாரும் அதிகமாகத் தரமுன்வரவில்லை.

ராமகிருஷ்ணா வெளியானால் தனது ரேட்டே வேறாக இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்ட ஸ்ரீதேவிகா,அத்தனை வாய்ப்புக்களையும் உதறித் தள்ளினார்.

இப்போது இதுவும் இல்லாமல், அதுவும் இல்லாமல் அல்லாடிவருகிறார்.

முன்பு தன்னைத் தேடி வந்தவர்களை போன் மூலமும் நேரடியாகவும் சந்தித்தும் வாய்ப்பு கேட்டு வருகிறார்.ஆனால், இவர் நடித்த முதல் படமே வெளிவராததால் ராசி முத்திரை குத்தி அவரை ஒதுக்கிக் கொண்டிருக்கிறதுகோடம்பாக்கம்.

இதனால் வழக்கமாக எல்லா நடிகைகளும் எடுக்கும் கவர்ச்சி ஆயுதத்தை இவரும் உபயோகப்படுத்தஆரம்பித்துள்ளார். தாராளமாய் நடிக்கத் தயார் என்று ஆள் வைத்து சொல்லி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அதைநிரூபிக்கும் வகையில் ஸ்ரீதேவிகாவின் தாராள ஸ்டில்கள் சிலவும் கோடம்பாக்கத்தில் சுற்றி வருகின்றன.

ஸ்ரீதேவிகா கதை இப்படி இருக்க கூட நடித்த வாணியோ ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு பிடிக்கும்முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil