»   »  கொடுமைப்படுத்துகிறார் வந்தனாவிவாகரத்து கோரி ஸ்ரீகாந்த் மனு

கொடுமைப்படுத்துகிறார் வந்தனாவிவாகரத்து கோரி ஸ்ரீகாந்த் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:வந்தனா தன்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஊருக்காக ஒரு திருமணத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் வந்தனா குடும்பத்தார் மீது மோசடி வழக்குகள் இருப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து கல்யாணம் நின்றது. இதுகுறித்து வந்தனா குடும்பத்தார் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் பேச்சு நடத்த முயன்றனர். ஆனால் அது பலனைத் தரவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் இரவில் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்த வந்தனா, அதிரடியாக அவரது வீட்டில் குடியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த்தும் அவரது பெற்றோரும் வீட்டிலிருந்து வெளியேறி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

தனது வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ள வந்தனாவை வெளியேற்றக் கோரி ஸ்ரீகாந்த் தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. அதேபோல, வந்தனா தரப்பிலும் புகார் செய்யப்பட்டது. இரு தரப்பு புகார்களையும் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு வழக்குகளிலும் இருவரும் முன்ஜாமீனும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு வந்தனாவிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அவருடன் ஸ்ரீகாந்த்தின் வழக்கறிஞர் பாண்டியன் வந்திருந்தார்.

ஸ்ரீகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் எனக்கும், வந்தனாவுக்கும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கடந்த 2007, பிப்ரவரி 7ம் தேதி கல்யாணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழவில்லை. குடும்பம் நடத்தவில்லை.

தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். இந்த நிலையில் எனது வீட்டிற்குள் வந்தனா அத்துமீறி நுழைந்துள்ளார். ரவுடிகளுடன் அவர் புகுந்துள்ளதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டோம்.

அவர் என்னைக் கொடுமைப்படுத்தி வருகிறார். அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இனி அவருடன் சேர்ந்து வாழ நான் விரும்பவில்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை. எனவே விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

விவாகரத்து கோர வேண்டுமானால் கல்யாணமாகி குறைந்தது ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீகாந்த், வந்தனா கல்யாணம் நடந்து 4 மாதங்கள்தான் ஆகின்றன. எனவே ஸ்ரீகாந்த்தின் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. 6 மாத காலம் வரை அவர் காத்திருக்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil