»   »  ஸ்ரீகாந்த் தேவா இனி வெறும் ஸ்ரீ!

ஸ்ரீகாந்த் தேவா இனி வெறும் ஸ்ரீ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாக்காரர்கள் சென்ட்டிமென்ட் சிகரங்கள். திடீரென இனிஷியலை முன்னே பின்னே மாற்றிப் போடுவார்கள்... பெயரில் கூடுதலாக சில எழுத்துக்கள் சேர்ப்பார்கள்.. பெயரைச் சுருக்குவார்கள் அல்லது மாற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்ற நம்பிக்கை.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் இதற்கு விலக்கல்ல. டபுள்ஸ் மூலம் இசையமைப்பாளரான இவர், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் பெற்று விஜய் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் திடீரென அமைதியாகிவிட்டார்.

Srikanth Deva changes his name

இப்போது சில படங்களுக்கு இசையமைத்தாலும், தான் விரும்பிய இடத்தை அடைய முடியாத ஏக்கம் அவருக்கு.

சரி, பெயரை மாற்றிப் பார்த்தால் அந்த இடம் கிடைக்குமா என்ற ஆசையில், சிலரது யோசனையில், ஸ்ரீகாந்த் தேவா என்ற பெயரை வெறும் ஸ்ரீ என சுருக்கிக் கொண்டுள்ளார். அவரது நெருங்கிய நண்பர்களும் அவரை அப்படித்தான் அழைப்பார்களாம்.

ஸ்ரீ பெயர் மாற்றம் பலனைத் தருமா.. பார்க்கலாம்!

English summary
Music Director Srikanth Deva has changed his name as Shri.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos