»   »  கவர்ச்சிப் பாட்டு வச்சே ஆகணும், அடம்பிடித்த ராய் லட்சுமி.. மறுப்புத் தெரிவித்த வடிவுடையான்

கவர்ச்சிப் பாட்டு வச்சே ஆகணும், அடம்பிடித்த ராய் லட்சுமி.. மறுப்புத் தெரிவித்த வடிவுடையான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுகார்பேட்டை படத்தில் கவர்ச்சிப்பாட்டு வைக்க வேண்டும் என்று நடிகை ராய் லட்சுமி அடம்பிடிக்க, அதனை இயக்குநர் வடிவுடையான் மறுத்து விட்டாராம்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்துக்குப்பின் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் பேய்ப்படமாக சவுகார்பேட்டை உருவாகி இருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


சவுகார்பேட்டை

சவுகார்பேட்டை

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, மனோபாலா, சுமன், சரவணன், சிங்கம்புலி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சவுகார்பேட்டை. தம்பி வெட்டோத்தி சுந்தரம் புகழ் வடிவுடையான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் அண்மையில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பெயருக்கும் படத்திற்கும்

பெயருக்கும் படத்திற்கும்

"சவுகார்பேட்டை படத்திற்கும், பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இப்படத்திற்கு சவுகார்பேட்டை என்ற தலைப்பை இயக்குநர் வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நான் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன்.


பேய், மந்திரவாதி

பேய், மந்திரவாதி

பேய், மந்திரவாதி என்று 2 விதமான வேடங்களில் இப்படத்தில் நடித்தது ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இரண்டு கதாபாத்திரங்களும் மோதும் சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. ஒருவர் இருப்பது போன்று கற்பனை செய்துகொண்டு நடிப்பது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.


கவர்ச்சிப் பாட்டு

கவர்ச்சிப் பாட்டு

இந்த படத்தில் ராய் லட்சுமி எனக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் அவரும் ஒரு பேயாகத் தான் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது தனக்கு ஒரு கவர்ச்சிப்பாட்டு வேண்டும் என்று ராய் லட்சுமி அடம்பிடிக்க, பதிலுக்கு இயக்குநர் மறுத்து விட்டார்.


உண்மைக் காதல்

உண்மைக் காதல்

உண்மையான காதல் ஜெயிக்கும். அனைத்திலும் உயர்ந்தது கடவுள் சக்தி என்பதுதான் படத்தின் கதை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் சிலங்கா என்ற பெயரில் வெளியாகிறது". இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான நம்பியார் 2 வருடங்களுக்கும் மேல் வெளியாகாமல் இருக்கும் நிலையில் சவுகார்பேட்டை தனக்கு கைகொடுக்கும் என்பது ஸ்ரீகாந்த்தின் நம்பிக்கையாக உள்ளது.


English summary
Actor Srikanth Shared some Information about his Upcoming Film Sowkarpettai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil