»   »  ஜெகதிக்கு மீண்டும் சோதனை

ஜெகதிக்கு மீண்டும் சோதனை

Subscribe to Oneindia Tamil

மலையாள காமெடி நடிகர் ஜெகதீ ஸ்ரீகுமாருக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

மலையாளத்தில் படு பிரபலமானவர் ஜெகதி. 30 வருடங்களாக மலையாளத்தில் மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் ஜெகதி, இதுவரை 1100 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

காமெடி, வில்லன், கேரக்டர் என பல விதமான கேரக்டர்களில் நடிக்கும் திறமையான நடிகர் ஜெகதி. மலையாளத்தில் 10 படங்கள் தயாரானால், 5 படங்களில் ஜெகதி இருப்பார். அந்த அளவுக்கு படு பிசியான நடிகர் ஜெகதி.

இந்த நிலையில் கடந்த 1996ம் ஆண்டு விதுரா என்ற இடத்தில் இளம் பெண்ணைக் கற்பழித்ததாக ஜெகதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. சமீபத்தில் குற்றச்சாட்டு உறுதியாக நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனை அடிப்படையாகக் கொண்டு ஜெகதியை விடுதலை செய்வதாக கோட்டயம் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்படா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஜெகதி. ஆனால் அந்த வழக்கில் ஜெகதி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜெகதி கலங்கிப் போயுள்ளார்.

ஜெகதிக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதால், ஜெகதி மட்டுமல்லாமல், மலையாளத் திரையுலகிலும் கூட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil