»   »  என்னை பார்த்தால் எப்படி தெரியுது, கேஸ் போடுறேன்: பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவேசம்

என்னை பார்த்தால் எப்படி தெரியுது, கேஸ் போடுறேன்: பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபல ஊடகம் மீது புகார் நடவடிக்கை எடுக்கும் பாடகர் ஸ்ரீநிவாஸ் !!- வீடியோ

சென்னை: தன் பெயரை கெடுத்த மீடியா மீது வழக்கு தொடரப் போவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் பெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த செய்தியை வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்று தமிழ் பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த ஸ்ரீனிவாஸ் கோபம் அடைந்துள்ளார்.

வழக்கு

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் இறந்தபோது சில மீடியாக்கள் என் பயோடேட்டாவுடன் இரங்கல் செய்தி வெளியிட்டன. தற்போது ஹைதராபாத்தில் யாரோ ஒரு பாடகர் ஸ்ரீனிவாஸ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு என் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். என் பெயரை கெடுத்ததற்கு இந்த முறை அவர்கள் மீது வழக்கு தொடரப் போகிறேன். இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் யாராவது உதவ முடியுமா? நான் மிகவும் கோபத்தில் உள்ளேன் என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

சென்னை

@IamSaloniSingh என் பெயர் ஸ்ரீனிவாஸ். நான் சென்னையை சேர்ந்த பாடகர். இதே பெயரில் ஹைதராபாத்தில் ஒரு பாடகர் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா டைம்ஸ் என் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

நீக்கம்

வழக்கு தொடரப் போவதாக ஸ்ரீனிவாஸ் தெரிவித்த பிறகு இந்தியா டைம்ஸ் அந்த தவறான செய்தியை நீக்கிவிட்டது. மேலும் ஸ்ரீனிவாஸிடம் ஃபேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளது இந்தியா டைம்ஸ்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு தொடரலாம் என்று ஒருவர் கமெண்ட் செய்ததை பார்த்த ஸ்ரீனிவாஸ் நிச்சயம் வழக்கு தொடரப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Singer Srinivas's FB post read, 'Years back when the legendary singer PB Sreenivas died some presswalas too my biodata and wrote an obituary column.. Now some singer Srinivas in Hyderabad gets arrested on a sexual harassment case, they publish my photograph .. This time I am going to sue them for damage caused to my reputation .. Can some legal experts here help me please ? I am really angry with this.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X