»   »  பாகுபலி 2 படத்திற்கு கிராபிக்ஸ் எபெக்ட்ஸ் கொடுக்கும் 'புலி' கமலக்கண்ணன்

பாகுபலி 2 படத்திற்கு கிராபிக்ஸ் எபெக்ட்ஸ் கொடுக்கும் 'புலி' கமலக்கண்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் 2 படத்தில் பணியாற்ற ஸ்ரீனிவாஸ் மோகன் பாகுபலி 2 படத்திற்கு கிராபிக்ஸ் அமைக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லையாம்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஷங்கர் ரஜினியை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்க உள்ளார்.

Srinivas Mohan replaced by Puli VFX supervisor for Baahubali 2

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு யார் வில்லன் என்பது பற்றி பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் அமைக்க பாகுபலி புகழ் ஸ்ரீனிவாஸ் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

பாகுபலி படத்தை பார்த்தவர்களால் கிராபிக்ஸை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஸ்ரீனிவாஸ் மோகன் கிராபிக்ஸில் சக்கை போடு போட்டிருந்தார். பாகுபலி 2 படத்திற்கும் அவர் தான் கிராபிக்ஸ் பணியை பார்ப்பார் என்று நினைத்தால் அவர் எந்திரன் 2 படத்தில் வேலை செய்ய உள்ளார்.

ஸ்ரீனிவாஸ் மோகன் இல்லாததால் புலி உள்ள பல படங்களில் கிராபிக்ஸில் கலக்கிய கமலக்கண்ணன் பாகுபலி 2 படத்தில் கிராபிக்ஸ் பணியை கவனிக்க உள்ளாராம்.

    English summary
    VFX supervisor Srinivas Mohan is not going to work for Baahubali 2 as he is going to work for Enthiran 2.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil