»   »  நிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்

நிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் சதீஷ் பேசியது பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி ரகுராமை வெளியேற்ற வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிக் பாஸோ காயத்ரியை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்.

இது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் சதீஷ் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருவருக்கும் காயத்ரியின் சேட்டைகள் பிடிக்காது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஸ்ரீப்ரியா, சதீஷ் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நாங்கள் ஓட்டு போட்டும் காயத்ரி ஏன் காப்பாாற்றப்படுகிறார் என்று கமலை பார்த்து ஸ்ரீப்ரியா கேட்க அவர் பதில் சொல்ல முடியாமல் திணறி ஒருவகையாக சமாளித்தார்.

சதீஷ்

சதீஷ்

நடிகர் சதீஷோ கட்டிப்பிடி மற்றும் தடவல் மன்னனான சினேகனின் சேட்டைகளை டெமோ செய்தே அதுவும் கமலை வைத்தே நடித்துக் காட்டி பிக் பாஸை அசிங்கப்படுத்திவிட்டார்.

குஷி

குஷி

ஸ்ரீப்ரியா கேட்ட கேள்விகள் மற்றும் சதீஷின் டெமோவை பார்த்த பார்வையாளர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். கமலுக்கு சினேகனின் சேட்டைகள் தெரிந்தும் அவரை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Big Boss viewers are happy after seeing Sripriya and Sathish questioning Kamal Haasan about the programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil