»   »  லட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு!

லட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஜீ தமிழ் சேனலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக நிறைய தவறுகள் நடப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

அண்மையில் வெளியான 'அருவி' படத்தில் அந்நிகழ்ச்சியை பற்றி மோசமாக விமர்சித்தனர். இது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது.

Sripriya voice against lakshmi ramakrishnan

லட்சுமி ராமகிருஷ்ணன், அருவி இயக்குநருக்கு எதிராக பல கேள்விகளை கேட்டு வருகிறார். படத்தின் வெற்றிக்காக, மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை கொச்சைப் படுத்துவது அறம் அல்ல எனக் கூறி வருகிறார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதப் பொருளாகி இருக்கிறது. 'அருவி' படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களும் வைக்கப்ப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இதுதான் ஆரம்பம், நிகழ்ச்சிக்கு எதிராக நாம் எழுப்பும் குரல் சாதாரண மக்களுக்கு போய்ச் சேரும்" என பதிவு செய்துள்ளார்.

English summary
Lakshmi Ramakrishnan is presenting a show on Zee tamil channel in the name of 'Solvadhellam unmai'. Many people have been accused of doing a lot of mistakes for TRB rating in this show. Recently, the film 'Aruvi' badly criticized this program. At this stage, actress Sripriya has posted on her Twitter page, "It's the beginning, looks like our voices against these shows exposing innocent people ara being heard."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X