பெண்ணிடம் தவறாக நடந்த போட்டியாளரை வெளியே அனுப்ப வேண்டும்.. பிக் பாஸ் குறித்து ஸ்ரீபிரியா ட்வீட்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகையான ஸ்ரீபிரியா என்ன இன்னும் அந்த நிகழ்ச்சி பற்றி எதுவுமே சொல்லவில்லை என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அசீம் ஆயிஷாவிடம் அத்துமீறி நடந்து கொண்ட சர்ச்சையை முன் வைத்து அவர் போட்ட ட்வீட் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி விட்டது என்கிற ஒரு ட்வீட்டையும் மட்டும் ஸ்ரீபிரியா போட்டிருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார இறுதியில் எல்லை மீறி போன சம்பவங்கள் பற்றி அவர் விவாதத்தை ஆரம்பித்துள்ளார்.

அசீமை வெளியே அனுப்பணும்
ஆயிஷாவிடமும், விக்ரமனுடனும் அத்துமீறி நடந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர் சின்னத்திரை நடிகர் அசீமை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அது இந்த வாரம் நடக்காது என்றும் நடக்கவில்லை என்றும் உறுதியாகி உள்ளது.

ரெட் கார்டு டிராமா
அசீம் பெண் போட்டியாளரை அவமரியாதையாக நடந்து கொண்ட நிலையில், ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியே அனுப்புவார் என்று பார்த்தால், சக போட்டியாளர்களிடம் ரெட் கார்டு கொடுத்து அசீமுக்கு கொடுக்க வைத்து அசிங்கப்படுத்தும் ரெட் கார்டு டிராமா மட்டுமே அரங்கேறி இருப்பது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

ஸ்ரீபிரியா கண்டனம்
ஏற்கனவே ஒரு சீசனில் பெண் போட்டியாளரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஒருவரை அதிரடியாக வெளியேற்றினாங்களே என சரவணன் மேட்டரை மறைமுகமாக சொன்ன ஸ்ரீபிரியா இப்போ ஏன் அசீமை வெளியே அனுப்பக் கூடாது என்கிற கேள்வியையும் ஆயிஷாவிடம் அவர் நடந்து கொண்ட விதத்தையும் பெயர் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார்.

விக்ரமன் டார்கெட்
மேலும், தேவையில்லாமல் பிரச்சனை டீவியேட் செய்யப்பட்டு விக்ரமன் தேவையில்லாமல் டார்கெட் செய்யப்படுகிறார் என விக்ரமனுக்கு ஆதரவாக ஸ்ரீபிரியா ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்களாவது இந்த விஷயத்தை பேசுனீங்களே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விக்ரமனுக்கு ஆதரவா
அரசியல்வாதி விக்ரமனுக்கு ஆதரவா ஸ்ரீபிரியா கருத்து தெரிவித்து அவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு, அசீம் உள்ளிட்டோர் பெயரை குறிப்பிடாமல் இருப்பது தெளிவான அரசியல் ஆதரவு என நெட்டிசன்கள் ஸ்ரீபிரியாவையும் கலாய்த்து வருகின்றனர். விக்ரமன் ஒன்றும் டார்கெட் செய்யப்படவில்லை. அவர் அசீமிடம் எதிர்த்து பேசியிருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











