»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான பங்களாவை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றஉத்தரவை எதிர்த்து அவரது மாஜி கணவர் ஜார்ஜ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீவித்யா, தனது ஊரைச் சேர்ந்த ஜார்ஜை மணந்தார். இதை தொடர்ந்து இருவரும்சென்னை மகாலிங்கபுரத்தில் பங்களாவில் குடியிருந்தனர்.

அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஸ்ரீவித்யா கணவரைப் பிரிந்தார், வீட்டைவிட்டும் வெளியேறினார். ஆனால், பங்களாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீவித்யா கேட்டார். தர மறுத்தார்ஜார்ஜ்.

இதை தொடர்ந்து அந்த பங்களாவை சினிமா சூட்டிங்குக்கு வாடகைக்கு விட்டு வந்தார் ஜார்ஜ். இதையடுத்து, அந்தபங்களா தனது வருமானத்தில் கட்டப்பட்டதாகவும், இதனால் அதை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும், சூட்டிங்வாடகை மூலம் கிடைத்த பணத்தையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் ஸ்ரீவித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதே நேரத்தில் இது என் வருமானத்தில் கட்டப்பட்டது, இதனால் வீடு எனக்கே சொந்தம் என்று என்று கூறிஜார்ஜும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், வீட்டை ஸ்ரீவித்யாவிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில்ஸ்ரீவித்யா வருமான வரிக் கட்டத் தவறியதால், வீட்டையே ஜப்தி செய்யப் போவதாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பையும், வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்த்தும்உயர் நீதிமன்றதிலேயே ஜார்ஜ் அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த இரு மனுக்களையும் உயர் நீதிமன்றடிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜார்ஜ் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்தமனுவைய உச்ச நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை ஸ்ரீவித்யாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு ஜார்ஜ்தள்ளப்பட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil