»   »  காசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்

காசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள வித்யா பாலன் ஒரு காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் நுழைவது எளிதான விஷயம் அல்ல. பாலிவுட்டில் நுழைந்த பின்னும் அங்கு தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க பலர் படாதபாடு படுகிறார்கள். இதற்கிடையே வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யும் விஷயங்கள் வேறு.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள சிலரின் ஆரம்பக்கட்ட போராட்டம் குறித்து தெரிய கொள்ளுங்கள்.

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு எக்கச்சக்க சொத்து உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் அவர் தூங்க கூட இடம் இல்லாமல் ரயில் நிலைய பிளாட்பார்மில் தூங்கியுள்ளார். வறுமையின் கொடுமையை பார்த்ததால் தான் மீண்டும் அதை பார்க்கக் கூடாது என்று கடிமையாக உழைக்கிறேன் என ஷாருக்கான் ஒரு முறை தெரிவித்தார்.

படுக்கை

படுக்கை

பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள ரன்வீர் சிங் ஒரு காலத்தில் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். பட வாய்ப்புக்காக தன்னை ஒரு ஆண் படுக்கைக்கு அழைத்ததாக ரன்வீர் முன்பு தெரிவித்தார்.

வாட்ச்மேன்

வாட்ச்மேன்

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி நடிக்க வரும் முன்பு வாட்ச்மேனாக வேலை செய்துள்ளார். பாலிவுட்டில் வந்ததும் அவர் பெரிய ஆளாகிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்

சம்பளம்

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் கங்கனா ரனாவத். நடிப்பில் அசத்தும் அவர் ஒரு காலத்தில் தினமும் பிரெட்டும், ஊறுகாயும் சாப்பிட்டு நாட்களை கடத்தியுள்ளார் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார்.

ஹோட்டல்

ஹோட்டல்

3 இடியட்ஸ் படத்தில் வந்த ஸ்ட்ரிக்டான கல்லூரி பிரின்சிபாலான போமன் இரானி நடிக்க வரும் முன்பு மும்பையில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக இருந்துள்ளார். அவரின் அம்மாவின் பேக்கரி கடையை நடத்த உதவி செய்துள்ளார்.

சமையல்

சமையல்

பாலிவுட்டின் வெற்றி நாயகன் என்று பெயர் எடுத்துள்ளவர் அக்ஷய் குமார். அவர் ஒரு காலத்தில் சமையல் கலைஞராகவும், வெயிட்டராகவும் பணியாற்றியுள்ளார். பெரும் போராட்டத்திற்கு பிறகே பாலிவுட்டில் முன்னேறினார்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

பாலிவுட் ஹீரோயின்களுக்கான இலக்கணத்தை மாற்றியவர் வித்யா பாலன். அவர் முதலில் டிவி சீரியல், விளம்பர படங்களில் நடித்தார். அதன் பிறகே பாலிவுட்டில் அறிமுகமானார்.

English summary
Entering Bollywood and getting a name for you is not an easy task. Leading hero Akshay Kumar once worked as a chef and a waiter before making his way into Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil