»   »  படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்

படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்நிலையில் அவர் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.

படத்திற்கு மாரியப்பன் என பெயர் வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

மாரியப்பன்

மாரியப்பன்

சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமைத் தேடித் தந்தவர்.

ஃபர்ஸ்ட் லுக்

மாரியப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை வெளியிட்டதுடன் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா

தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட ஷாருக்கானுக்கு ஐஸ்வர்யா தனுஷ் நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார். மேலும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரெண்ட்

டிரெண்ட்

பாலிவுட்டில் விளையாட்டுத் துறையை சேர்ந்த மில்கா சிங், டோணி, மேரி கோம், போகத் சகோதரிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு ஹிட்டும் ஆகியுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா தங்க மகன் மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குகிறார்.

English summary
Superstar Shah Rukh Khan shared the first look of filmmaker Aishwaryaa Rajinikanth Dhanush's next Tamil directorial, a biopic on Indian Paralympic high jumper Mariyappan Thangavelu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil