»   »  எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் திரைப்படப்பாடல்கள் எழுத புதிய பட்டயப்படிப்பு

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் திரைப்படப்பாடல்கள் எழுத புதிய பட்டயப்படிப்பு

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

கவிதை எழுதும் திறமை கொண்டவர்கள் திரைப்படப் பாடல் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே திரைப்படப் பாடல் இயற்றுநர் என்ற புதிய பட்டயப்படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சிவாஜிகணேசன் திரைப்படக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்கிறது.

தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. எழுபது பேருக்கு காத்திருக்கிறது.. காலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர விருப்பமுள்ளவர்கள் இந்த பட்டயப்படிப்பினை படிக்கலாம்.

ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்.. வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற.. உங்கள் ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..

உலகில் முதன் முதலாக

உலகில் முதன் முதலாக

ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.எனவே பாடல்கள் எழுத பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் பிரியன் முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

மெட்டுக்களுக்கு பாட்டெழுத

மெட்டுக்களுக்கு பாட்டெழுத

உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.

இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். அனைத்தும் வசம்.

பாடல் இயற்றுநர்

பாடல் இயற்றுநர்

மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரப் பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை..

நீங்களும் பாடலாசிரியர்தான்

நீங்களும் பாடலாசிரியர்தான்

கவிதை, பாடல் எல்லாம் தானாய் வருவது அதைக் கற்றுக் கொடுக்க முடியுமா எனஎழும் சந்தேகங்களுக்கு விடை.எப்படி அடிப்படைக் குரல்வளமும், பாடும் ஆர்வமும் உள்ளவர்கள் முறைப்படி அதைக் கற்றுக் கொண்டு சிறந்த பாடகர்களாக முடிகிறதோ. எப்படி அடிப்படை இசையறிவும் ஆர்வமும் உள்ளவர்கள் முறைப்படி அதைக் கற்றுக் கொண்டுத் தங்களை மெருகேற்றிக் கொள்ள முடிகிறதோ அதைப்போலத்தான் பாடல் இயற்றலும். அடிப்படைத் தமிழறிவும், அடிப்படைக் கவிபுனையும் அறிவும், ஆர்வமும் உள்ளவர்கள் முறைப்படி அதைப் பயின்று திறன் மிக்கப் பாடல் இயற்றுநராக முடியும்.

பாடலாசிரியர்களை உருவாக்க

பாடலாசிரியர்களை உருவாக்க

எத்தனையோ படைப்பாளிகள் பாடல் எழுதுதலுக்கான தேடல் கொண்டு அதற்கான சரியான அரங்கம் இன்றி.. கற்றுக் கொள்ள வாய்ப்பின்றி இருப்பதற்கு தீர்வாகவே இந்தப் படிப்பு..

தமிழ்மொழியை தொழில்முறைப் படிப்புகளுக்கு (Professional Course) முன்னெடுத்துச் செல்வதும்.. பாடல் இயற்றும் புது அறிவை முறையாய் வளர்த்துக்கொள்ள உதவுதலும், சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாட்டுப் படைப்பாளிகளை உருவாக்குவதுமே நோக்கம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்

எப்படி விண்ணப்பிக்கலாம்

எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், ஜூலை 2013-ஆம் ஆண்டிற்கான, திரைப்பாடல் இயற்றுநர் - தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.srm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என, முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள்.

திரைப்பாடல் இயற்றுநர்

திரைப்பாடல் இயற்றுநர்

ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பாக திரைப்பாடல் இயற்றுநர் கற்றுக் கொடுக்கப்படுகிறது. (தினசரி மற்றும் வாரயிறுதி)குறைந்தபட்சக் கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு (any group)சிறப்புத் தகுதி - தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.கூடுதல் தகுதியாக கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி

எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி

பாடல் படைத்த படைப்பு அல்லது பதிவு ஏதாவது. இடம் - எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.சேர்க்கை அலுவலகம் : எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் நகர், காட்டாங்குளத்தூர் - 603203மேலும் விவரங்களுக்கு.. பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) - 8056161139,மின்னஞ்சல் - diplyric.srm@gmail.com, diplyric.piriyan@gmail.com

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    SRM university is establishing a new diploma course in film songs.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more