»   »  சாந்தனு-சிருஷ்டி டாங்கேவின் 'முப்பரிமாணம்'

சாந்தனு-சிருஷ்டி டாங்கேவின் 'முப்பரிமாணம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சாந்தனுவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிருஷ்டி டாங்கேவிற்கு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் சிருஷ்டி டாங்கே. இவர் தற்போது அச்சமின்றி, ஒரு நொடியில், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் சாந்தனுவின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிருஷ்டிக்கு கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநர் ஆதி ரூபன் இயக்கும் இப்படத்திற்கு முப்பரிமாணம் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதிரடி ஆஷன் படமாக உருவாகும் முப்பரிமாணம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளனர்.

சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் வாய்மை திரைப்படம் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shanthanu Team up with Srushti Dange for Mupparimanm.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil