»   »  ஸ்ருஷ்டி டாங்கே உடன் டூயட் பாடும் மா.கா.பா ஆனந்த்

ஸ்ருஷ்டி டாங்கே உடன் டூயட் பாடும் மா.கா.பா ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத்திரையில் அது இது எது நிகழ்ச்சியில் கலக்கலான தொகுப்பாளராக வலம் வரும் மா.கா.பா ஆனந்த் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். கன்னக்குழியழகி ஸ்ருஷ்டி டாங்கே உடன் இப்போது தென்காசி, குற்றாலம் என்று குளு குளு பகுதிகளில் டூயட் பாடி வருகிறார்.

பர்மா படத்தை தயாரித்த ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படம் நவரச திலகம். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். நவரச திலகம் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரான்.


ரியல் எஸ்டேட் அதிபர்

ரியல் எஸ்டேட் அதிபர்

ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை செய்து உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்பதுதான் மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை. அவனது தாரக மந்திரமாக இருப்பது ‘ஒரே டீல் ஓஹோன்னு வாழ்க்கை என்கிறார் இயக்குநர் காம்ரன்.


அதிபுத்திசாலி மா.கா.பா ஆனந்த்

அதிபுத்திசாலி மா.கா.பா ஆனந்த்

அரைகுறையாகத் தெரிந்த தொழிலை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா பன்னீர் சேர்த்த சொத்து எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இந்த கதாப்பாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார் என்கிறார் இயக்குநர்.


காமெடிக்கு கருணாகரன்

காமெடிக்கு கருணாகரன்

மா.பா.கா ஆனந்த் உடன் கருணாகரனும் இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும் செம ஜாலியான படமாக ‘நவரச திலகம்' உருவாகியுள்ளது. வித்தியாசமான வேடம் ஒன்றில், ‘இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா', ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.


குற்றாலத்தில் குளுகுளு டூயட்

குற்றாலத்தில் குளுகுளு டூயட்

சமீபத்தில் மா.கா.பா.ஆனந்த் - சிருஷ்டி டாங்கே பங்கேற்ற ‘கொள்ள அழகுக்காரி போறாளே.. முன்னால நல்லா இருந்தவன வழி மாற வெச்சாளே' என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் படமாக்கினோம் என்கிறார் இயக்குநர்.


தொழில் நுட்ப கலைஞர்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு - ரமேஷா, இசை - சித்தார்த் விபின், பாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ், கலை - சீனு, நடனம் - தினேஷ், சண்டைக்காட்சி - மகேஷ், தயாரிப்பு நிர்வாகம் - லோகு - சங்கர், தயாரிப்பு மேற்பார்வை - ஆஸ்கார் நாகராஜ், இணை தயாரிப்பு -கே.ஜெயச்சந்திரன்ராவ், தயாரிப்பு சுதர்சன வெம்புட்டி.


மா.கா.பாவிற்கு பிரேக்

மா.கா.பாவிற்கு பிரேக்

சின்னத்திரையில் இருந்து வந்து ஹீரோவானவர்களின் சிவகார்த்திக்கேயன் தவிர வேறு யாருக்கும் சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் எதுவும் அமையவில்லை. மா.கா.பா ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்தப்படமாவது மா.கா.பா ஆனந்திற்கு திருப்புமுனையாக அமையுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


English summary
Srushti dange's chemistry work out with Ma Ka Pa Anand. Navarasa Thilagam Movie lead roles in the film is being played byMa Ka Pa Anand and Srushti Dange and also the music director Siddharth Vipin is in important role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil