கமல் எப்படி இருக்கிறார்... அப்பாவின் ஹெல்த் பற்றி அப்டேட் கொடுத்த மகள் ஸ்ருதிஹாசன்

சென்னை : உலகநாயகன் கமலஹாசனுக்கு திங்கள்கிழமையன்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கமலுக்க கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

கமல் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து, பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என கமலை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அப்டேட்

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அப்டேட்

இந்நிலையில் கமலின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், இன்று தனது தந்தை கமலின் உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அது கமல் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

விரைவில் சந்திப்பார்

விரைவில் சந்திப்பார்

ஸ்ருதி இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எங்க அப்பா குணமடைய வேண்டி நீங்கள் அனைவரும் அளித்த வாழ்த்துக்கள் மற்றும் செய்துள்ள பிரார்த்தனைகளுக்கு நன்றி. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார்

ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார்

கமல் குணமடைந்து திரும்பி வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதி இரண்டு நாட்களுக்கான எபிசோட்களின் ஷுட்டிங் நாளை நடைபெற உள்ளது.

கமல் தவிர யாரும் இல்லை

கமல் தவிர யாரும் இல்லை

அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தவிர வேறு யாரையும் மாற்றும் எண்ணம் விஜய் டிவி.,க்கு இல்லையாம். அதனால் கமல் ஒப்புக் கொண்டால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் கமலே தொகுத்து வழங்க போவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

 யாருப்பா வழங்க போகிறார்

யாருப்பா வழங்க போகிறார்

கமல் குணமாகி வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலே தொகுத்து வழங்க போகிறாரா அல்லது அவருக்கு பதில் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க போகிறாரா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளனதாம்.

இவர்கள் வர வாய்ப்பில்லை

இவர்கள் வர வாய்ப்பில்லை

விஜய் சேதுபதி அல்லது சிம்புவை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்க போகிறார்கள் ஒரு தகவல் அடிபடுகிறது. ஆனால் அவர்கள் இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு தான் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X