»   »  கோடம்பாக்க தேர்தல் ஜூரம்... விஷால் அணிக்கு இதமாக ஒரு பாட்டுப் போட்ட எஸ்எஸ் குமரன்!

கோடம்பாக்க தேர்தல் ஜூரம்... விஷால் அணிக்கு இதமாக ஒரு பாட்டுப் போட்ட எஸ்எஸ் குமரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தின் உச்சகட்ட அதிகார அமைப்பு என்றால் அது தயாரிப்பாளர் சங்கம்தான். முதலாளிகள் சங்கம். இந்த சங்கத்துக்கான தேர்தலில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் முட்டல் மோதல் சகஜம்தான் என்றாலும், இந்த ஆண்டு இதுவரை பார்த்திராத அளவுக்கு பரபரப்பான சூழல்.

காரணம் அந்த அளவுக்கு கடுமையான போட்டி. குறிப்பாக நடிகர் விஷால் தலைமையில் 'நம்ம அணி' களமிறங்கியதும் ஏக விறுவிறுப்பு.

SS Kumaran composes a song for Vishal Team

அதே நேரம், இவர்களுக்கு தினம் ஒரு அதிரடிக் கேள்வி எழுப்பி திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர் எதிரணியினர்.

இந்தத் தேர்தலில் விஷால் பயன்படுத்தி வரும் உத்திகள், சாதாரண தயாரிப்பாளர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. பைக்கில் அல்லது நடந்து போய் வாக்கு கேட்டு வருகின்றனர் விஷால் அணியினர்.

குறிப்பாக சென்னைப் பக்கம் வராமல் வெளியூர்களில் செட்டிலாகிவிட்ட கிட்டத்தட்ட 300 தயாரிப்பாளர்களை தேடித் தேடிப் போய் வாக்கு கேட்டு வருகிறார்கள். விஷால் போன்ற நடிகர்களே தேடி வருவதால் தயாரிப்பாளர்களும் ஏக ஆர்வம் காட்டுகிறார்களாம் அவர்களைச் சந்திக்க.

இந்த நேரத்தில் விஷால் அணியை குதூகலப்படுத்த ஒரு அட்டகாசமான பாடலை உருவாக்கியுள்ளார் இயக்குநரும், களவாணி பட இசையமைப்பாளருமான எஸ்எஸ் குமரன்.

"எழுந்து வா... நீ இழந்தது போதும்..." என்று ஆரம்பிக்கிறது பாடலின் பல்லவி.

கே.ஆர்.தரண் எழுதியுள்ள இந்தப் பாடலை அரவிந்த் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கிறார். தேர்தல் ஜூரத்தில் களைத்துப் போயிருக்கும் களப்பணியாளர்களுக்கு உற்சாகமளிக்கும் இசைப்பாட்டாகத் திகழ்கிறது எஸ்எஸ் குமரனின் இந்தப் படைப்பு.

பாடல் வீடியோவுக்கு...

English summary
Director, Music Composer SS Kumaran has composed a new song in support of Vishal's Namma Ani campaign in Producers Council election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil