அமெரிக்காவில் அனல் பறக்கும் RRR புரமோஷன்.. பட ரிலீசுக்கு முன்பாக பலே பிளான் போட்ட ராஜமெளலி!

சென்னை: இந்திய மார்க்கெட்டை எல்லாம் தாண்டி இன்டர்நேஷனல் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் இங்கிலாந்து நடிகர்கள் என பல டாப் நடிகர்கள் நடித்துள்ள RRR திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மீண்டும் தனது புரமோஷன் வேலையை படு ஸ்பீடாக ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பில்போர்டுகளில் RRR படத்தின் படக் காட்சிகள் ஓடும் வீடியோவை தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

சர்வதேச மார்க்கெட்

சர்வதேச மார்க்கெட்

பாகுபலி இரண்டாம் பாகத்தையே சர்வதேச அளவில் புரமோட் செய்திருந்தார் இயக்குநர் ராஜமெளலி. மார்வெல் நடிகர்களே பாகுபலி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது எல்லாம் வேற லெவல் மைலேஜ். இந்நிலையில், RRR படத்தையும் சர்வதேச அளவில் மார்க்கெட் செய்ய களமிறங்கி உள்ளார் ராஜமெளலி.

மீண்டும் புரமோஷன்

மீண்டும் புரமோஷன்

ஜனவரி 7ம் தேதி படம் வெளியாகப் போவதாக அறிவித்து இருந்த ராஜமெளலி அதற்காக இந்தியா முழுவதும் புரமோஷன்களை செய்து வந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 7ம் தேதி படம் வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ள படத்திற்காக இன்னும் ஒரு வாரம் அனல் பறக்கும் புரமோஷனை ஆரம்பித்து இருக்கிறார்.

நியூயார்க் நகரில்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரம்மாண்டமாக இருக்கும் டிஜிட்டல் பில்போர்ட்களின் நடுவே RRR டிரைலரும் ஒளிபரப்பாகி வருகின்றன. அமெரிக்காவின் RRR படத்தின் புரமோஷன் அனல் பறப்பதாக தற்போது படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஹைதராபாத்தில் பேட்டி

ஹைதராபாத்தில் பேட்டி

ஏற்கனவே விஜய் டிவியில் டிடி நீலகண்டன் உடன் ஒரு சூப்பர் பேட்டி நடத்தப்பட்ட நிலையில், தற்போது விஜே ரம்யாவுடன் மீண்டும் ஒரு அட்டகாசமான பேட்டியை நடத்தி வருகின்றனர். ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மூவரும் தமிழில் பேசும் இந்த பேட்டி ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாக லைகா அறிவித்துள்ளது.

Recommended Video

Udhaynithi Stalin Speech About RRR Movie | RRR grand Pre-Release event in Chennai, Rajamouli
தண்டரஸ் புரமோஷன்

தண்டரஸ் புரமோஷன்

மார்ச் 18ம் தேதியான நாளை ஆரம்பிக்கப் போகும் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் இடி முழக்கம் போல இன்னும் ஒரு வாரத்திற்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திணறடிக்கப் போகிறது. ஹைதராபாத், துபாய், பெங்களூரு, பரோடா, ஜெய்ப்பூர், அம்ரிதசரஸ் மீண்டும் ஹைதரபாத் என மார்ச் 23ம் தேதி வரை RRR புரமோஷன் நடக்கப் போகுதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X