»   »  ராஜமவுலிக்கு அடுத்து ரூ 1௦௦௦ கோடி பட்ஜெட்டாம்... இது கருடாவா.. புருடாவா?

ராஜமவுலிக்கு அடுத்து ரூ 1௦௦௦ கோடி பட்ஜெட்டாம்... இது கருடாவா.. புருடாவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராஜமௌலி தற்போது அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார்.

ஆமாம் அவரது அடுத்த திரைப்படத்தை சுமார் 1௦௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். இதுவரை உண்மையில் ரூ 200 கோடி கூட முழுசாக எந்தப் படத்துக்கும் இந்தியாவலில் செலவழிக்கப்படவில்லை என்ற நிலையில், இந்தப் படத்துக்கு ரூ 1000 கோடி பட்ஜெட் என்பதை வெறும் புருடா என்ற ரேஞ்சுக்கு சினிமா ஆர்வலர்கள் பார்த்து வருன்றனர்.

பாகுபலி

பாகுபலி

தற்போது பாகுபலி 2 படத்தை எடுத்துவரும் ராஜமௌலி இதனை முடித்து விட்டு அடுத்ததாக பெரிய பட்ஜெட் படத்தை கையில் எடுக்கவிருக்கிறார்.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் ஜூலை மாதம் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் வரவேற்புப் பெற்றது. 120 கோடிகளுக்கும் அதிகமான பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 600 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனராக ராஜமௌலி உருவெடுத்தார்.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாகுபலி 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி. முதல் பாகத்தை விடவும் இந்தப் பாகத்தை மிகவும் பிரமாண்டமாக உருவாக்கும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியிருக்கின்றனர்.

மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன்

மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன்

பாகுபலி படத்திற்குப் பின்னர் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுனை வைத்து 2 பெரிய பட்ஜெட் படங்களை இயக்க ராஜமௌலி திட்டமிட்டு இருக்கிறார் என்று டோலிவுட் திரை வட்டாரங்களில் தகவல் வெளியானது.

கருடா

கருடா

ஆனால் அடுத்ததாக ராஜமௌலி தனது கனவுப் படமான மகாபாரதத்தை இயக்கவிருக்கிறார் என்று தற்போது கூறுகின்றனர். புராணப் படமாக இந்தப் படத்தை எடுக்கவிருக்கும் ராஜமௌலி சுமார் 1௦௦௦ கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். படத்திற்கு கருடா என்று பெயர் வைக்கவிருப்பதாகவும் அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

மோகன்லால் மற்றும் ஜூனியர் என்டிஆர்

மோகன்லால் மற்றும் ஜூனியர் என்டிஆர்

கருடா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கப் போகிறார்களாம்.

English summary
Latest buzz in Tollywood Director Rajamouli is aso planning for another Magnum Opus, Garuda, which will be a mythological film loosely based on Mahabharath. It is heard that the film will be made on a whooping 1000cr budget and Malayalam star Mohanlal is being considered for the key role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil