அடேங்கப்பா...1000 கோடி வசூலை நெருங்கும் 'ஆர்ஆர்ஆர்'...உற்சாகத்தில் படக்குழு

சென்னை : எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதால் படக்குழுவினரும், ரசிகர்களும் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை.

1000 கோடி கிளப்பில் ஆர்ஆர்ஆர்

1000 கோடி கிளப்பில் ஆர்ஆர்ஆர்

ரசிகர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பையும் கவர்ந்தததாக இந்த படம் அமைந்தது. படம் ரிலீசாகி 12 நாட்களிலேயே ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் 940 கோடிகளை தாண்டி உள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட்டான 500 கோடியையும் 10 நாட்களில் வசூல் செய்து விட்டனர். ஒரே வாரத்திலேயே பாகுபலி முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்த ஆர்ஆர்ஆர், 1000 வசூலை நெருங்க உள்ளதை அனைவரும் ஆவலாக கவனித்து வருகின்றனர்.

பார்ட்டி கொடுத்த ராஜமெளலி

பார்ட்டி கொடுத்த ராஜமெளலி

தற்போது வரை ஆர்ஆர்ஆர் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நல்ல கூட்டம் வந்து கொண்டிருப்பதால் இன்று அல்லது நாளைக்குள் ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை கடந்து புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கொண்டாடுவதற்காக ராஜமெளலி, திரையுலகை சேர்ந்த விஐபி.,க்கள் பலரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஆர்ஆர்ஆர்

இரண்டாவது இடத்தில் ஆர்ஆர்ஆர்

இந்திய அளவில் இதுவரை ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் மட்டுமே 1800 கோடிகளை வசூல் செய்துள்ளது. மற்ற எந்த படமும் 1000 கோடி வசூலை தாண்டியதில்லை. தற்போது ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை கடந்து இரண்டாவது இடம் பிடிக்க உள்ளது. இதுவரை பாலிவுட்டில் பஜ்ரங்கி பாய்ஜன் படம் தான் 915 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. இந்த படத்தின் வசூலை தற்போது ஆர்ஆர்ஆர் கடந்து விட்டது.

Recommended Video

RRR MOVIE REVIEW | JNTR | Ramcharan | SS Rajamouli | Filmibeat Tamil
ஓப்பனிங் நாளிலேயே சாதனை

ஓப்பனிங் நாளிலேயே சாதனை

கடந்த 13 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் ஆர்ஆர்ஆர் படம் 528.50 கோடிகளை வசூல் செய்துள்ளது. ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் 1000 கோடி வசூல் சாதனை அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான முதல் நாளிலேயே 228.50 கோடிகளை வசூல் செய்து தென்னிந்தியாவிலேயே ஓப்பனிங் நாளில் அதிகம் வசூலித்த படம் என்ற பெயரை பெற்று விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X