»   »  காட்சி நேரம்... எஸ்எஸ் ராஜமௌலியின் அண்ணன் எஸ்எஸ் காஞ்சி இயக்கும் படம்!

காட்சி நேரம்... எஸ்எஸ் ராஜமௌலியின் அண்ணன் எஸ்எஸ் காஞ்சி இயக்கும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தைத் தயாரித்து வரும் ராமா ரீல்ஸ் சுதிர் புதோடா தனது அடுத்த படத்தையும் அறிவித்துள்ளார்.

அந்தப் படம் காட்சி நேரம். படத்தை இயக்குபவர் எஸ் எஸ் காஞ்சி. தெலுங்கில் பெரிய ஸ்க்ரிப்ட் ரைட்டர். இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் சொந்த அண்ணன்.

இந்த படத்தில் ரணதீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருக்ஷார் மீரா நடிக்கிறார். கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக சுப்ரீத் நடிக்கிறார்.

SS Rajamouli'sd brother turns director through Katchi Neram

ஒளிப்பதிவு - பூபதி.கே, இசை - மரகதமணி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.எஸ்.காஞ்சி.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இன்றைய சமுதாயம் ஒழுக்கமான முறையில் இருந்து எவ்வாறு சீரழிந்து கொண்டு போகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படமாக இருக்கும், காட்சி நேரம்.

SS Rajamouli'sd brother turns director through Katchi Neram

ஒரு மாடர்ன் தம்பதியினரைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரவுடித்தனம் பண்ணும் முரட்டுத்தனமான படித்த நான்கு இளைஞர்களுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே எதிர்பாரத ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்னையால் என்ன விபரீதங்கள் நடக்கின்றன... மக்களின் இன்றைய மனநிலையும், அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுவதாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது," என்கிறார்.

English summary
Ace director SS Rajamouli's elder brother SS Kanchi is now turned as director through Katchi Neram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos