twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு இணையான ‘சிம்மக் குரலோன்’ ஆக விளங்கிய எஸ்.எஸ்.ஆர்.!

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் தனது தெளிவான உச்சரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களில் நடிகர் எஸ்.எஸ்.ஆரும் ஒருவர் என்பது மறுக்க இயலாத உண்மை.

    எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழம் பெரும் நடிகரும், மூத்த அரசியல் வாதியும் ஆவார். 1947ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த பைத்தியக்காரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான போதும், சிவாஜியுடன் நடித்த பராசக்தி படமே எஸ்.எஸ்.ஆருக்கு தமிழ்த் திரை உலகில் நல்லதொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

    கருணாநிதி கதை, வசனத்தில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தில், சிவாஜியின் அண்ணனாக நடித்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

    முதலாளி...

    முதலாளி...

    அதனைத் தொடர்ந்து 1957ம் ஆண்டு முதலாளி படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

    தெளிவான உச்சரிப்பு...

    தெளிவான உச்சரிப்பு...

    நடிகர் சிவாஜியைப் போன்றே தமிழ்த் திரையுலகில் கம்பீரமான குரலும், தெளிவான உச்சரிப்பையும் பெற்றிருந்த நடிகர் என மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

    காலத்தால் அழியாத காவியங்கள்...

    காலத்தால் அழியாத காவியங்கள்...

    இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவை என்றால் மிகையில்லை.

    இயக்குநராகவும்...

    இயக்குநராகவும்...

    நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் பங்காற்றினார் எஸ்.எஸ்.ஆர். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

    English summary
    Veteran actor-politician, SS Rajendran died here today following illness, his family said. Rajendran (86), who started off his career as a theatre artiste, later ventured into Tamil cinema and carved a place for himself with his impeccable dialogue delivery.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X