twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்கால இளசுகளை முணு முணுக்க வைத்த எஸ்.எஸ்.ஆரின் 'ஏரிக்கரையின் மேலே'…

    By Mayura Akilan
    |

    ஒரு பாடல் ஹிட் ஆக வேண்டுமானால் அது ரசிகர்களால் முணுமுணுக்கப்பட வேண்டும். பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பவேண்டும்.

    கறுப்பு வெள்ளை காலத்திலேயே ரொமான்ஸ் பாடல்களால் காதலர்களை கவர்ந்தவர் எஸ்.எஸ்.ஆர்.

    எஸ்.எஸ்.ஆர் பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் விஜயகுமாரியுடனான காதல் காட்சியில்தான் கூடுதல் ரொமான்ஸ்சும், அதீத கெமிஸ்டிரியும் செட் ஆகும்.

    பட்டி தொட்டி எங்கும்

    பட்டி தொட்டி எங்கும்

    1957ல் வெளியான முதலாளி படத்தில் வெளியான ஏரிக்கரையின் மேலே பாடல் ஏரி, குளக்கரை, பட்டி, தொட்டி எங்கும் அக்கால இளசுகளால் முணுமுணுக்கப்பட்டது.

    பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன்தான் என்றாலும், அதற்கு வாயசைத்து நடித்த எஸ்.எஸ்.ஆர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவரது படத்தில் உள்ள பிரபல பாடல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

    முதலாளி - ஏரிக்கரை

    முதலாளி - ஏரிக்கரை

    ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே

    என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே

    அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே

    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே...

    என்று காதலியை கவர்பண்ண அப்போதே மயிலே, குயிலே என்று வர்ணித்து பாடியிருப்பார் எஸ்.எஸ்.ஆர்.

    குமுதம் படத்தில்

    குமுதம் படத்தில்

    விஜயகுமாரியுடன் எஸ்.எஸ்.ஆர் நடித்த குமுதம் படத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் உள்ளன. அதில்

    என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

    நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா என்ற பாடல் அக்கால காதலர்களிடையே பிரபலமானது.

    கல்யாணம் ஆனவரே

    கல்யாணம் ஆனவரே

    அதே படத்தில் வரும் கல்யாணம் ஆனவரே சவுக்கியமா பாடலும் சூப்பர்ஹிட் பாடலாக அமைந்தது.

    தை பிறந்தால் வழி பிறக்கும்

    தை பிறந்தால் வழி பிறக்கும்

    இன்றைக்கு தை மாதம் பிறந்தாலே ரேடியோக்களிலும், பொதிகை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் பாடல் "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்" பாடல் காலம் கடந்தும் இன்றைக்கு ஒலிக்கிறது.

    திருமண வீடுகளில்

    திருமண வீடுகளில்

    சாரதா படத்தில் மணமகளே மருமகளே வா வா பாடல் இன்றைக்கும் அனைத்து திருமண வீடுகளிலும் ஒளிபரப்பாகிறது.

    முத்து மண்டபம்

    முத்து மண்டபம்

    அதேபோல எஸ்.எஸ்.ஆர் தயாரித்து நடித்த முத்து மண்டபம் படத்தில் சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமாடா பாடலும் அனைவராலும் அன்றைய காலத்தில் பாடப்பட்ட பாடல்.

    Read more about: ssr songs cinema சினிமா
    English summary
    S.S Rajendran started as a theatre artist. He debuted in Parasakthi and became one of the most popular stars of Tamil cinema in 1950s to 1960s. He moved into politics, but due to his personal problems led him to his fall in his film career and in politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X