»   »  சிவாஜி நினைவு தபால் தலைவெளியிடப்படுகிறது.

சிவாஜி நினைவு தபால் தலைவெளியிடப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி சென்னையில் நினைவு தபால் தலைவெளியிடப்படுகிறது.

திரைப்படத் துறையில் நடிகர் சிவாஜி கணேசன் செய்துள்ள அரிய சேவைகளுக்காக இந்த தபால் தலை வெளியிடப்படுகிறது.மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெரும் முயற்சியின் பேரில் இந்த தபால் தலை வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு தமிழ் நடிகர் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சென்னையில் அக்டோபர் 1ம் தேதி சிவாஜியின் பிறந்த நாளன்று நடக்கும் நிகழ்ச்சியில் அவரது படம் பொறித்த தபால் தலையைமத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் வெளியிடுகிறார். ரூ. 4 மதிப்பிலானது இந்த தபால் தலை.

Read more about: actor, cinema, sivajigansan, stamp, tamilnadu
Please Wait while comments are loading...