»   »  தமிழ் சினிமா நட்சத்திர கிரிக்கெட்... அறிவிச்சாச்சு எட்டு டீம்கள் பெயரும்!

தமிழ் சினிமா நட்சத்திர கிரிக்கெட்... அறிவிச்சாச்சு எட்டு டீம்கள் பெயரும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  1. மதுரை காலேஜ்
  2. சென்னை சிங்கம்ஸ்
  3. நெல்லை டிராகன்ஸ்
  4. தஞ்சை வாரியர்ஸ்
  5. திருச்சி டைகர்ஸ்
  6. ராமநாடு ரைனோஸ்
  7. கோவை கிங்ஸ்
  8. சேலம் சீட்டாஸ்

-இதாங்க நம்ம தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் பெயர்கள்.

இந்த எட்டு அணிகளும் மோதும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த கிரிக்கெட் கொஞ்சம் வித்தியாசமானது. ஆள் பற்றாக்குறை என்பதாலோ என்னமோ, ஒரு அணியில் ஆறு நடிகர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

Star Cricket: 8 teams announced

சரி ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் யார்?

அதில்தான் சிக்கல். கேப்டன்கள் தயாராக இருந்தாலும், யார் எந்த அணிக்குத் தலைவராக இருப்பது என்பதில் இன்னும் சிக்கல் தொடர்கிறது. கேப்டன்கள் இவர்கள்தான்: சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஜீவா.

விளம்பர தூதர்கள்

நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர்தான் இந்த நட்சத்திரப் போட்டிகளுக்கு விளம்பரத் தூதர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

இப்பவே ரூ 9 கோடி!

இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை ரூ 9 கோடி. இன்னும் ரசிகர்களிடம் வசூல் வேறு உள்ளது. எப்படியும் கட்டடம் கட்ட தேவையான பணத்தில் கணிசமான பகுதியை இதிலேயே வசூலித்து விடுவார்கள் போலுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

ரஜினி, கமல், அமிதாப்

இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல், அமிதாப் பங்கேற்கிறார்கள். முதல் போட்டியை ரஜினி பந்துவீசி அல்லது பேட் செய்து தொடங்கி வைப்பதாகத் திட்டம்.

English summary
Nadigar Sangam has announced the names of 8 star cricket teams today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil