»   »  நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன்

நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் ஒன்றிணைந்து நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை ரஜினி, கமல் இருவரும் டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர்.

Star Cricket: Chennai Singams Win the Trophy

இதில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ், விஷாலின் மதுரை காளைஸ், கார்த்தியின் கோவை கிங்க்ஸ், ஜெயம் ரவியின் நெல்லை டிராகன்ஸ், ஆர்யாவின் சேலம் சீட்டாஸ், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ், விஜய் சேதுபதியின் ராம்நாடு ரைனோஸ், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் மோதின.

போட்டிகளின் முடிவில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி 84 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

English summary
Star Cricket: Surya's Chennai Singams Team Win the Trophy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil