நட்சத்திர கிரிக்கெட்... இந்த முறை நடிகைகளும் கிரிக்கெட் ஆடறாங்க!

By Shankar

சென்னை: நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டில், அணியில் இடம்பெறுகிற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் பங்கேற்கிறார்கள். போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரே நாளில் 7 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த 8 அணிகளில் 48 நடிகர்கள் பங்குபெறுகிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இருப்பார்கள். 6 ஓவர்களுக்குப் போட்டி நடக்கும். ஏப்ரல் 17 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டி, இரவு 10 மணி வரை நடைபெறும்.

டிக்கெட் கட்டணம், சேடிலைட் உரிமம் என மொத்தம் ரூ. 13 கோடி இந்த போட்டி மூலம் நடிகர் சங்கத்துக்குக் கிடைக்கிறது.

அணிகளின் கேப்டன்கள்:

சென்னை சிங்கம்ஸ் - சூர்யா

மதுரை காளைஸ் - கேப்டனாக விஷால்

திருச்சி டைகர்ஸ் - சிவகார்த்திகேயன்

கோவை கிங்ஸ் - கார்த்தி

சேலம் சீட்டாஸ் - ஆர்யா

தஞ்சை வாரியர்ஸ் - ஜீவா

நெல்லை டிராகன்ஸ் - ஜெயம் ரவி

ராமநாடு ரைனோஸ் - விஜய் சேதுபதி

அணியில் இடம்பெறுகிற வீரர்களின் விவரம்:

சென்னை சிங்கம்ஸ்:

சென்னை சிங்கம்ஸ்:

விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

மதுரை காளைஸ்:

மதுரை காளைஸ்:

ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

கோவை கிங்ஸ்:

கோவை கிங்ஸ்:

பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

நெல்லை டிராகன்ஸ்:

நெல்லை டிராகன்ஸ்:

அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

ராமநாடு ரைனோஸ்:

ராமநாடு ரைனோஸ்:

ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்:

தஞ்சை வாரியர்ஸ்:

அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்:

சேலம் சீட்டாஸ்:

கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா

திருச்சி டைகர்ஸ்:

திருச்சி டைகர்ஸ்:

விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X