»   »  நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு கொடுத்த நாசர்

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு கொடுத்த நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நடிகர் சங்கத் தலைவர் நாசர் நேற்று சென்னை கமிஷனரிடம் மனு கொடுத்தார்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Star Cricket League Nasser Petition to the Commissioner

இந்த கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். வருகின்ற ஏப்ரல் 17 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் ரமணா, லலிதா குமாரி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் "நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் இன்னும் முடிவு செய்யபடவில்லை" என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

நடிகர் ரமணா கிரிக்கெட் குறித்து நிருபர்களிடம் " 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக காலை முதல் நடைபெறும். 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.

50 நடிகர்கள் போட்டியில் விளையாடுகின்றனர். 50 நடிகைகள் போட்டியில் கலந்து கொள்ளும் நடிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்' என்று கூறினார்.

விரைவில் இப்போட்டி குறித்த கட்டண விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Star Cricket will provide security for : Nasser Petition to the Commissioner of Police.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil