»   »  'கிரவுடா இருக்கும்னு பாதுகாப்பு கேட்டீங்க'.. நட்சத்திரக் கிரிக்கெட்டை ஓட்டும் நெட்டிசன்ஸ்!

'கிரவுடா இருக்கும்னு பாதுகாப்பு கேட்டீங்க'.. நட்சத்திரக் கிரிக்கெட்டை ஓட்டும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை. மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

இதனால் நடிகர் சங்கத்தினர் ஒருபக்கம் கவலையில் இருக்க, மற்றொருபுறம் நெட்டிசன்கள் இதனை வைத்துக் செமையாக ஓட்டி வருகின்றனர்.

மக்கள் கூட்டம் இல்லாதது, நடிகைகளின் தமிழ் கமெண்டரி போன்ற கண்றாவிக் காட்சிகள் இவர்களின் கையில் சிக்க, இணையத்தில் நடிகர் சங்கமே ஒட்டுமொத்தமாக ஓட்டப்பட்டு வருகிறது.

ஐய்யோ பாவம்!

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியைக் காண ஐபிஎல் ரேஞ்சுக்கு கூட்டம் இருக்கும் என எதிர்பார்த்தால் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.

கக்கூஸ் கூட கட்ட முடியாதே!

இவர், போட்டிக்கு வந்த கூட்டத்தை வைத்து கக்கூஸ் கூட கட்ட முடியாதே என்று ஏங்கிப் போட்டுள்ளார் இந்த கிண்டல் டிவீட்டை.

கிரிக்கெட்டா இது... சொல்லவே இல்லை!

நடிகர்கள் ஒழுங்காக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை இப்படிக் கிண்டல் செய்திருக்கிறார் திவா.

சோனி சிக்ஸ்

நடிகைகளின் தமிழ் கமெண்டரியை சோனி சிக்ஸுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருக்கிறார் ஹக்கீம்.

இதுக்குப் பாதுகாப்பா!

ரஜினி, கமல் நேரில் வருவதால் இப்போட்டிக்கு போலீல் பாதுகாப்பு வேண்டும் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். ஆனால் ஒரு ரசிகரையும் காணாமல் ஈயாடிக் கொண்டிருந்ததை கிண்லடித்துள்ளார் இவர்.

English summary
Star Cricket Match today Held on Chepauk Stadium - Related Memes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil