»   »  நட்சத்திர கிரிக்கெட்: ஆத்தாடி... டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா?

நட்சத்திர கிரிக்கெட்: ஆத்தாடி... டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்டைப் பார்ப்பதற்காகன கட்டண விவரம் வெளியாகியுள்ளது.

'ரஜினி வர்றாக, கமல் வர்றாக, அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி வர்றாக... இவங்களோட ஏகப்பட்ட நட்சத்திரங்களும் வர்றாக... எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க கட்டணம்?'

Star Cricket show ticket details

ரூ 500, 1000, 2000, 3000, 6000, 10000...!!

இந்தப் போட்டியில் எட்டு அணிகள் விளையாடுகின்றன. எட்டு அணிகளிலும் தலா ஆறு பேர்தான் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டியும் 6 ஓவர்கள் கொண்டதாக இருக்கும்.

முதல் முறையாக நடிகைகளும் நடிகர்களும் கலந்து ஆடும் கிரிக்கெட் இது. ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சாவ்லா, கெளரி முன்ஜால், திவ்யா, ருக்மினி, கீர்த்தி சுரேஷ், ரம்யா நம்பீசன், நமீதா, தமன்னா, மனீஷா யாதவ், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நடிகைகள் இந்த எட்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.

த்ரிஷா உள்ளிட்ட 8 கதாநாயகிகள் விளம்பரத் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1000 நடிகர்- நடிகைகள் இந்த கிரிக்கெட்டைப் பார்க்க வருகிறார்கள். விளையாட்டைக் காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் கட்டணம் மற்றும் சேட்டிலைட் உரிமை மூலம் நடிகர் சங்கத்துக்கு ரூ.13 கோடி வருமானம் கிடைக்குமாம்!

English summary
Nadigar Sangam has fixed Rs 500 to Rs 10000 as admission tickets for their star cricket show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil