»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டி.விக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாட்டடை நாங்கள் மீறவில்லை என்று சினிமா தயாரிப்பாளர்சங்கத்தால் தடை விதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் குமுறலுடன் கூறியுள்ளனர்.

திரையுலகினர் டி.விக்கு பேட்டியளிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறியதாக, நடிகர்கள் முரளி, பிரசாந்த்,நடிகைகள் ரம்பா, மும்தாஜ், மீனா, ஸ்நேகா, டைரக்டர்கள் உதயகுமார், சுபாஷ் மற்றும் 6 படத்தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என்று திரை உலகம் முடிவு செய்து அறிவித்திருந்தது.

இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கோபத்துடனும் வருத்தத்துடனும் நிருபர்களுக்குப்பேட்டியளித்துள்ளனர்.

முரளி:

சினிமாதான் எனது உலகம். கடந்த 18 ஆண்டுகளாக சினிமாதான் எனக்கு சோறு போடுகிறது. சினிமாவில் நடித்துபெயரும், புகழும் கிடைத்ததால்தான் டி.விக்காரர்கள் பேட்டி எடுக்க வருகிறார்கள்.

தீபாவளியன்று வெளிவந்த எனது பேட்டி, திரை உலகினர் முடிவெடுப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது. திரைஉலகினர் கூடி முடிவெடுத்த பிறகு, நான் எந்த டெலிவிஷனுக்கும் பேட்டியளிக்கவில்லை. இனியும் பேட்டிகொடுக்க மாட்டேன்.

பிரசாந்த்:

எனக்கு சினிமா தான் முக்கியம். நானும் சரி, அப்பாவும் சரி சினிமாவில் இருந்து வந்தவர்கள். நான் சினிமாவில்எந்த வம்பு-தும்புக்கும் போகாதவன். திரையுலகக் கட்டுப்பாட்டை மீறாதவன்.

திரையுலகினர் கூடி முடிவெடுத்தபோது நான் "மஜ்னு" படத்திற்காக மலேஷியா சென்றிருந்தேன். நான் வந்த பிறகுஇதைப்பற்றி யாரும் எனக்கு சொல்லவில்லை. பேட்டி கொடுக்கக்கூடாது என்று சுற்றறிக்கையும் எனக்குவரவில்லை.

தீபாவளிக்கு எனது எந்தப் படமும் வராததால், எனது ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நான் ஒருமாதத்திற்கு முன்பு பேட்டியளித்தேன். அது தீபாவளிக்கு வெளிவந்து இப்படி சிக்கலை ஏற்படுத்தும் என்று நான்எதிர்ப்பார்க்கவே இல்லை.

டி.வியால் சினிமா பாதிக்கும் என்றால் நான் இனி எந்த டி.விக்கும் பேட்டியளிக்கவில்லை.

மீனா:

திரையுலகினர் கூடி தீர்மானம் போட்ட விவரமே எனக்கு தெரியாது. அப்போது நான் ஆந்திராவில் இருந்தேன்.

இது தெரியாமல் நான் டி.விக்கு பேட்டியளித்தேன். இதனால் விஜயகாந்திடம் தெரியாமல் பேட்டி கொடுத்துவிட்டேன் என்று கூறினேன். அவர் இனி பேட்டி கொடுக்காதே என்றார்.

அதன் பிறகு நான் எந்த டெலிவிஷனுக்கும் பேட்டியளிக்கவில்லை. இனி கொடுக்கவும் மாட்டேன்.

மும்தாஜ்:

தீபாவளியன்று டி.வியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி முன்னதாகவே எடுக்கப்பட்டது. திரையுலகமே முடிவு செய்தபிறகு நான் எந்த டி.விக்கும் பேட்டியளிக்கவில்லை.

பழைய பேட்டியை புதுசாக காட்டுவது போல் டெலிவிஷனில் ஒளிபரப்பி விட்டார்கள். மேலும் டி.விக்கு பேட்டிகொடுக்கக்கூடாது என்று எனக்கு எந்த அமைப்பும் சுற்றறிக்கை அனுப்பவில்லை.

இனி எந்த டெலிவிஷனுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil