»   »  'அடடா.. இவங்க கிரிக்கெட் பாக்கத்தான் லாயக்கு.. விளையாட அல்ல!'

'அடடா.. இவங்க கிரிக்கெட் பாக்கத்தான் லாயக்கு.. விளையாட அல்ல!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று நட்சத்திர கிரிக்கெட் பார்த்தபிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது... இந்த நட்சத்திரங்கள் பலருக்கும் கிரிக்கெட் பார்க்கத்தான் தெரிந்திருக்கிறது... விளையாடத் தெரியவில்லை என்பது.

சிவகார்த்திகேயன், விக்ராந்த், ஜேகே ரித்தீஷ், மிர்ச்சி சிவா, ரமணா, சாந்தனு போன்ற சிலர்தான் கிரிக்கெட்டை ஓரளவுக்கு சரியாக ஆடினார்கள். மற்றவர்கள் ஏனோ தானோ என்றுதான் 'வெளாடினார்கள்'.

Stars fail to shine in Star Cricket

சிலருக்கு பந்துவீசவே தெரியவில்லை. பல நடிகர்கள் வீசிய பந்து ஸ்டம்ப் பக்கம் போகவே இல்லை. இடதுபக்கமாக வீசினால் பந்து வலது பக்கத்துக்கு ஓடியது. ஓவர்கள் எண்ணிக்கையை விட வைட் பால்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

குறிப்பாக நடிகர் கார்த்தி. இத்தனைக்கும் இவர் ஒரு அணியின் கேப்டன். ஒரு ஓவரை வீச வந்தார். வரிசையாக 5 பந்துகளை வைடாகப் போட்டார். ஒரு பந்து கூட பிட்ச் பக்கம் வரவே இல்லை. இவருக்கு பந்துவீச்சே சுத்தமாக வரவில்லை. ஆனால் வாரக் கணக்கில் மாயாஜால் கிரவுண்டிலும் சேப்பாக்கத்திலும் பயிற்சி வேறு எடுத்தார்.

பேட்டிங்கிலும் சொதப்பல். சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட். இவரது அண்ணன் சூர்யாவும் பேட்டிங்கில் சொதப்பினார்.

இவர்களின் இந்த சொதப்பல்களை சமூக வலைத் தளங்களில் 'செம்மையாக கலாய்த்து'க் கொண்டிருந்தார்கள் நேற்று முழுவதும்!

English summary
Most of the film stars who participated in Natchathira Cricket have failed to play well.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil