»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தடையை மீறி டி.விக்களுக்கு பேட்டியளித்த நடிகர்கள் பிரசாந்த், முரளி, நடிகைகள் ரம்பா, மீனா, மும்தாஜ், ஸ்நேகாஆகியோர் புதுப்படங்களில் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

சினிமா தொழில் டி.வி.க்களின் ஆதிக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், நடிகர், நடிகைகள்,இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் டி.வி.க்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று தமிழ் சினிமாதயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், சினிமா தொழிலாளர்கள்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் திரையுலகினருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு நடிக்கவோ, வேறு வாய்ப்போ கொடுக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுவிதிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாட்டை மீறி டி.விக்கு பேட்டியளித்த நடிகர்கள் பிரசாந்த், முரளி, நடிகைகள் ரம்பா, மீனா, மும்தாஜ்,ஸ்நேகா ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.

புதிய படங்களுக்காக இவர்களை யாரும் அணுகக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நடிக-நடிகைகள் போதாதென்று டி.விக்களில் பேட்டி கொடுத்த சில இயக்குநர்களும் மாட்டிக் கொண்டார்கள். கே.சுபாஷ், ஆர். வி. உதயகுமார், ஸ்டன்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம் ஆகியோருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்தடை விதித்துள்ளது.

இவர்களுக்கு தயாரிப்பாளர்கள் யாரும் வாய்ப்பளிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன் டி.வி.க்களுக்கு டிரெய்லர்கள், பாடல் காட்சிகள் ஆகியவற்றை கொடுக்கும்போது, கட்டுப்பாடுகளைமீறிய சூப்பர் குட் பிலிம்ஸ், கவிதாலயா, ஜி.ஜெ. சினிமா, வி. கிரியேஷன்ஸ், அபராஜித் பிலிம்ஸ், கே.ஆர்.ஜி.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய திரைப்பட நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் தடை திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more about: actor, actress, cinema, interview, producer, tamilnadu, tv

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil