»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வதற்காகரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் மலேசியா புறப்படுகின்றனர்.

நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காகவும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் கோடம்பாக்கம்நடிக-நடிகைகள் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகளைநடத்துகின்றனர்.

இந்த விழாக்களில் மொத்தம் 53 நடிகர்-நடிகைகளும் 41 நடனக் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

முதற்கட்டமாக ஜூலை 24ம் தேதி நள்ளிரவு நடிகர் அர்ஜூன் தலைமையிலான ஒரு குழுவினர் மலேசியாவுக்குக்கிளம்பிச் சென்றனர்.

இந்தக் குழுவில் நடிகர்கள் கார்த்திக், அப்பாஸ், ராதாரவி, செந்தில், தியாகு, தாமு, வையாபுரி, நடிகைகள் குஷ்பு,ரோஜா, ரம்யாகிருஷ்ணன், சங்கவி, மும்தாஜ், கவுசல்யா, அபிராமி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களைத் தவிர மற்றொரு விமானத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா தலைமையிலான 41 நடனக் கலைஞர்களும்நேற்றே மலேசியாவுக்குக் கிளம்பிச் சென்று விட்டனர்.

அடுத்த கட்டமாக 25ம் தேதி இரவு நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், விக்ரம்,சூர்யா, பிரபுதேவா, ஷாம், நாசர், பிரகாஷ்ராஜ், வடிவேல், எஸ்.எஸ். சந்திரன், விவேக், சிலம்பரசன், நடிகைகள்மீனா, ஜோதிகா, தேவயானி, ரம்பா, சிம்ரன், கிரண், விந்தியா, திரிஷா, மனோரமா ஆகியோர் மலேசியாகிளம்பினர்.

மூன்றாவது கட்டமாக நடிகர்கள் பிரசாந்த், சத்யராஜ், விஜய், மாதவன், தியாகராஜன், சார்லி, நடிகை ரேவதி,இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் இன்று (26ம் தேதி) இரவு மலேசிய விமானத்தில் கிளம்பிச் செல்கின்றனர்.

27ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஒத்திகை நிகழ்ச்சிநடைபெறுகிறது.

பின்னர் அன்று இரவு 7 மணிக்கே கோலாலம்பூரில் உள்ள புத்ரா ஸ்டேடியத்தில் நட்சத்திரக் கலைநிகழ்ச்சிகள்தொடங்குகின்றன.

மலேசியா பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் செல்லும் நடிகர்-நடிகைகள் மறுநாள் அங்குள்ள எக்ஸ்போ-2என்ற ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இந்தக் கலைநிகழ்ச்சிகளை முன்னிட்டு நாளை முதல் ஐந்து நாட்களுக்கு எந்தவிதமான தமிழ் படப்பிடிப்பும்நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil