»   »  காலத்தை வென்ற ஸ்டீபனின் வாழ்க்கை... சினிமாவில் ஸ்டீபன் ஹாக்கிங்!

காலத்தை வென்ற ஸ்டீபனின் வாழ்க்கை... சினிமாவில் ஸ்டீபன் ஹாக்கிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சோர்வுற்றிருந்த பலருக்கு வாழ்வளித்தது ஹாக்கிங்கின் வாழ்க்கை- வீடியோ

கேம்பிரிட்ஜ் : அண்டப் பெருவெடிப்பு, கருந்துளை உள்ளிட்ட கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.

சிறுவயதிலேயே நரம்பு முடக்குவாத நோயால் (ALS) பாதிக்கப்பட்ட அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே தான் கடவுள் துகள் பற்றியும், பிரபஞ்ச விதிகளைப் பற்றியும் ஆராய்ச்சிகளைச் செய்தார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் கதையில் சினிமாக்களும் உருவாகியிருக்கின்றன. காலப்பயணத்தை பற்றிய அவரது ஆராய்ச்சிகள் மிக முக்கியமானவை.

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையைப் பற்றி சிலபல டாக்குமெண்டரி படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமானவை 'பியாண்ட் தி ஹாரிசோன்', 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்', 'ஹாக்கிங்' ஆகியவை. 'ஃபேட் ஆஃப் யுனிவர்ஸ்' படம் ஹாக்கின்ஸின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தப் படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

டாக்குமெண்டரி

ஹாக்கிங்கின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப் படம் அவரது ஒலிக்குறிப்புகளோடு வெளிவந்தது. ஸ்டீபனின் குடும்பம், நண்பர்கள், மாணவப்பருவம் என அவரது வாழ்க்கையை அவரே விவரிப்பது போல படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹாக்கிங் சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டது, இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிர்ப்பந்தம் என அவரது வாழ்க்கையை முழுவதுமாக விவரிக்கிறது இந்த டாக்குமெண்டரி.

'The theory of everything'

ஹாக்கிங் உடனான தனது பயணத்தை அவரது நண்பர் 'Travelling to Infinity: My Life with Stephen' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'The theory of everything' படம் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்தை ஜேம்ஸ் மார்ஷ் இயக்கினார்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

ஆஸ்கர் விருது போட்டியிலும் பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படம். இந்தப் படத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்காக நடித்த எட்டீ ரெட்மெய்ன் ஆஸ்கர் விருது பெற்றார். ஹாக்கிங்கின் வாழ்க்கை சோர்வுற்றிருந்த பலருக்கு வாழ்வளித்தது. அவரது வரலாறு பலருக்கும் பாடமானது. அவரது வாழ்வு மரணம் தாண்டி என்றென்றைக்கும் நினைவுகூரத்தக்கது.

English summary
Physicist Stephen Hawking passed away today. Cinemas have also evolved in the story of scientist Stephen Hawking. His life is beyond death and is remembered forever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil