Don't Miss!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- News
மாநில பொதுத்துறை நிறுவனங்களை இனி ஈஸியாக கண்காணிக்கலாம்! முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய வலைதளம்!
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மூன்று நாட்களாகியும் ஓயாத பரபரப்பு...தனுஷ் பெயரை நீக்காத ஐஸ்வர்யா
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் பிரிய போவதாக இரண்டு நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இதனால் மீடியாக்கள், திரையுலகம் என அனைத்தும் பரபரப்பாகின.
இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என சிலர் பலவிதமான தகவல்களை பகிர்ந்து வந்த நிலையில், ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முடிவு வேதனை அளிக்கிறது. இருவரும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நல்ல
மருமகன்…
தனுஷை
பாராட்டிய
ரஜினி...
இணையத்தில்
ட்ரெண்டாகும்
வீடியோ
!

விவாகரத்து செய்யவில்லை
ஆனால் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை. சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருப்பதாகவும், அவர்கள் இருவருமே தற்போது ஐதராபாத்தில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் என பலரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பெயரை நீக்காத ஐஸ்வர்யா
அதே சமயம் இவர்களின் விவாகரத்து பரபரப்பு மூன்று நாட்களாகியும் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. ஆனால் ஐஸ்வர்யா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தனுஷின் பெயரை நீக்கவில்லை. சோஷியல் மீடியாக்களில் தற்போது வரை Aishwarya_R_Dhanush என்று தான் அவரின் பெயர் உள்ளது. இதனால் அவர்களின் விவாகரத்து விவகாரம் உண்மையில்லை என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பெயரை நீக்கிய பிரபலங்கள்
இதற்கு முன் நடிகை சமந்தா, விவாகரத்தை அறிவிப்பதற்கு முன்பே தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனி என்ற நாகர்ஜுனாவின் குடும்ப பெயரை நீக்கினார். திருமணத்திற்கு முன்பு இருந்ததை போல் சமந்தாருத் பிரபு என்று மாற்றினார். பெயரை நீக்கினாலும் விவாகரத்து தொடர்பான வதந்திகள் பற்றி அவர் வாய்திறக்காமல் இருந்தார். கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகே கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக முறைப்படி அறிவித்தார்.
Recommended Video

விவாகரத்து வதந்தி
இதே சமீபத்தில் பிக்பாஸ் பிரபலமான அபினய் வட்டியின் மனைவியும் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அபினய், பாவனி இடையேயான காதல் விவகாரம் தான் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அவரும் இதுவரை விவாகரத்தை முறையாக அறிவிக்கவில்லை. ஆனால் அபர்னா தனது கணவர் அபினயின் பெயரை நீக்கி உள்ளதால் விவாகரத்து வதந்தி எழுந்துள்ளது.