»   »  போதும் இத்தோட நிறுத்திக்கங்க: தாலி ஏறிய கையோடு கூறிய நடிகை காவ்யா

போதும் இத்தோட நிறுத்திக்கங்க: தாலி ஏறிய கையோடு கூறிய நடிகை காவ்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னையும் நடிகர் திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை இத்துடன் நிறுத்துக் கொள்ளுமாறு நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் கொச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது. இது ஒரு திடீர் திருமணம் ஆகும்.

குடும்பத்தார், மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

கழுத்தில் தாலி ஏறிய கையோடு காவ்யா மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தன்னையும், திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை ரசிகர்கள் இத்துடன் நிறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

நானும், திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மலையாள ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறிவிட்டது என்று காவ்யா தெரிவித்துள்ளார்.

திலீப்

திலீப்

என் வாழ்வில் நடந்த சில பிரச்சனைகளுக்கு காவ்யா மாதவன் பொறுப்பில்லை என்று நடிகர் திலீப் கூறியுள்ளார். திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை பிரிய காவ்யாவே காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

புதுமணத் தம்பதியான திலீப், காவ்யா மாதவனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திலீப்பும், காவ்யாவும் சேர்ந்து 18க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

English summary
Actress Kavya Madhavan has asked people to stop gossiping about her and her actor husband Dileep.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos