Just In
- 11 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 39 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ரோர், தி டைகர் ஆப் சுந்தர்பன்': தேசிய விலங்கிற்காக ஒரு படம்!
மும்பை: இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவ்வினமே அழிவின் பிடியில் உள்ளது என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான்.
அப்படிப்பட்ட புலியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வர இருக்கும் திரைப்படம்தான் "ரோர்- தி டைகர் ஆப் சுந்தர்பன்".

புலிகளின் சரணாலயம்:
கமல் சாதனாக் இயக்கியுள்ள இப்படம் முழுக்க, முழுக்க புலிகளின் சரணாலயமாக விளங்கும் சுந்தரவனக் காடுகளை அடிப்படையாக கொண்ட படமாகும்.

புகைப்பட நிருபர்:
உதய் என்பவர் ஒரு இளம் புகைப்பட நிருபர். அவருக்கு புலிகளின் காடு என அழைக்கப்படும் சுந்தரவனக் காடுகளில் பணி தொடர்பான ஒரு வேலை வருகின்றது.

வெள்ளைப் புலிக்குட்டி:
அந்நிலையில்தான் அங்கு வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிய வெள்ளை வங்காள புலிக்குட்டி ஒன்றை காப்பாற்றி தன்னுடைய இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றார்.

பீதியில் கிராம மக்கள்:
இந்நிலையில் போகப்போக கிராம மக்களிடம் அதனால் பீதி ஏற்படுகின்றது. அவர்களை அமைதிப்படுத்த வனத்துறையினர் அந்த குட்டி புலியை மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனர்.

தாய் புலி:
இந்நிலையில் அக்குட்டியின் ரத்த வாசனை மூலமாக குட்டியின் இடத்தை தெரிந்து கொண்ட அப்புலிக் குட்டியின் தாய் உதயின் தங்குமிடத்திற்கே வந்து விடுகின்றது.

உதயைக் கொல்லும் புலி:
அங்கு தன்னுடைய குட்டி இல்லாத காரணத்தினால் கோபம் கொள்ளும் தாய்ப் புலி உதயைக் கொன்று அவருடைய உடலுடன் மாயமாகி விடுகின்றது.

சகோதரர் கேப்டன்:
உதயின் சகோதரர் ஒரு கமாண்டோ படையின் கேப்டன். அவர் தன்னுடைய சகோதரனின் உடலைத் தேடி சுந்தர்பன் காட்டிற்கு வருகின்றார்.

அமைதி காக்கும் மக்கள்:
கிராம மக்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், அவருக்கும், வனப்பகுதியின் பாதுகாப்பாளருக்கும் மோதல் ஏற்படுகின்றது. அப்பாதுகாப்பாளரான பெண், அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதாகவும், உதயின் சடலத்தை மீட்க மிகவும் அபாயகரமான அக்காட்டுப் பகுதிக்கு வேறு யாரையும் அனுப்ப இயலாது என்றும், தான் புலிகளை பாதுகாக்கத்தான் அங்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.

காட்டுக்குள் பயணம்:
ஆத்திரமடையும் உதயின் சகோதரர், இந்த விஷயத்தை தானே கையில் எடுக்க முடிவு செய்கின்றார். தன்னுடைய டீமுடன், உள்ளூர் கைடான மது மற்றும் புலிகள் பற்றி அறிந்த ஜும்பா என்பவருடன் அந்த வெள்ளைப் புலியைக் கண்டுபிடித்து கொல்லச் செல்கின்றார்.

மிரட்டும் சுந்தரவனக் காடு:
சுந்தரவனக் காட்டின் சதுப்பு நில மையப்பகுதிக்கு பயணம் செய்யும் போதுதான், அதுவரை பழங்கதைகளில் மட்டுமே கேட்டறிந்த பல அபூர்வமான விஷயங்களைக் காண்கின்றனர்.

புத்திசாலிப் புலி:
அந்த வெள்ளை பெண் புலி, ஒவ்வொரு முறையும் அவர்களை தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றுகின்றது. இந்நிலையில் அவர்களுடன் இருக்கும் வேட்டைக்காரர் பீரா, தனது திறமையை ஊருக்கு நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகின்றார்.

வேட்டையாகப் போகும் வேட்டைக்காரர்கள்:
அந்த ராயல் பெங்கால் புலியை வீழ்த்தி ஊர் மக்களிடம் தனது திறமையை நிரூபிக்க முடிவு செய்கிறார். இதற்காக திட்டமும் தீட்டுகின்றார். ஆனால் உண்மையில் அந்தப் புலியிடம் சிக்கப் போவது அவர் உள்ளிட்டமற்றவர்கள்தான் என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. மீதியை செப்டம்பரில் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்!