»   »  புலி படத்தை பற்றி கிலி பரப்பும் கதைகள்!

புலி படத்தை பற்றி கிலி பரப்பும் கதைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த படத்தைப் பற்றி சும்மா பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவார்கள். நல்லதோ, கெட்டதோ படத்திற்கு ஓசியில வர்ற விளம்பரந்தானே ஏன் வேண்டாம்னு சொல்றது என்று சினிமா இயக்குநரும் நமட்டு சிரிப்போடு நிறுத்திக்கொள்வார்.

கத்தி படத்திற்கு பின்னர் சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு ‘புலி' என்று பெயர் வைத்தாலும் வைத்தார்கள் அந்தப் படத்தைப்பற்றி கிலியை ஏற்படுத்தும் பல்வேறு கதைகள் உலா வருகின்றன.

புலி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இரு நாயகிகள்

இரு நாயகிகள்

புலி படத்தில் சுருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இரு நாயகிகள் நடித்தாலும் விஜய்க்கு இதில் மூன்று வேடம் என்று சொல்லி கிளப்பிவிட்டார். அப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க விஜய் விரும்பவில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.

கதைய கேளுப்பா

கதைய கேளுப்பா

‘புலி' படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்ட், மாவீரன் மற்றும் குள்ளனாக நடிக்கிறார் என்றும் கார்ட்டூனிஸ்ட் வரையும் ஓவியங்களில் இருந்து உயிர் பெற்று ஜூமாஞ்சி ஸ்டைலில் உலாவருகிறது என்றும் கதை விட்டார்கள்.

சஸ்பென்ஸ் குள்ளன்

சஸ்பென்ஸ் குள்ளன்

படத்தில் குள்ளன் ரோல்தான் படத்தின் ஹைலைட்டாம். குள்ளன் கூட வித்தியாசமான குள்ளன் என்பதால் அந்த வேடத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளதாகவும் கதை விடுகிறார்கள்.

ஆந்திரா டூ கேரளா

ஆந்திரா டூ கேரளா

‘புலி' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திர் ஆந்திரா பகுதியில் சண்டைக் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி என்ற சுற்றுலா தளத்தில் முகாமிட்டுள்ளது.

அடர்ந்த காட்டுக்குள்

அடர்ந்த காட்டுக்குள்

அடர்ந்த காடுகளும், அழகான இயற்கை வளங்களும் நிறைந்த அதிரப்பள்ளியின் அடர்ந்த காட்டுக்குள் ‘புலி' படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு முறை சொல்லுங்க

இன்னொரு முறை சொல்லுங்க

இதைவிட இன்னொரு கதையோ, புலியில் மன்னர் காலத்தில் ஒரு விஜய்யும், மாடர்ன் காலத்தைச் சேர்ந்தவராக ஒரு விஜய்யும் நடிக்கிறார் என்கின்றனர் இணைய கதையாசிரியர்கள்.

யாருக்கு யார் ஜோடி

யாருக்கு யார் ஜோடி

அரசியாக ஸ்ரீதேவி நடிக்க அவரது அழகு மகளாக இளவரசியாக ஹன்சிகா நடிக்கிறார். அனைத்து வித்தைகளும் அறிந்த மாவீரன் விஜய்யை காதலிக்கிறாராம் ஹன்சிகா.

சுதீப் யாரு?

சுதீப் யாரு?

கிச்சா சுதீப் ஸ்ரீதேவியின் மகனாக நடிக்கிறாராம். விஜய் - ஹன்சிகா காதல் நிறைவேறுமா? அதற்கு அரசியாரான ஸ்ரீதேவி ஒத்துக்கொள்வாரா? என்பதுதான் கதை.

மாடர்ன் விஜய்

மாடர்ன் விஜய்

மாடர்ன் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இது மன்னர் காலத்திய விஜய்க்கு நேர் எதிர் கேரக்டராம்.

நல்லா விடுறாங்க ரீலு

நல்லா விடுறாங்க ரீலு

படம் வெளியாகும் வரை இப்படித்தான் கதை கதையாக சொல்வார்கள். படம் வெளியாகப்போகும் நேரத்தில் அந்த கதை என்னது என்று வழக்குப் போடுவார்கள். சிம்புத்தேவன் இன்னும் எத்தனை கதைகளை கேட்க இருக்கிறாரோ தெரியலையே?

English summary
Ilayathalapathy Vijay’s forthcoming film Puli shooting is progressing at speed pace. Here is the exclusive story line of Puli. We do not know whether it is real story of Vijay’s Puli or not. But we are sharing the piece of information we knew.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil