twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்?

    |

    Recommended Video

    இணையதளத்தில் லீக் ஆன விஜய் சர்க்கார் கதை- வீடியோ

    சென்னை : விஜயின் சர்கார் படக் கதை இது தான் என இணையத்தில் ஒரு கதை வைரலாகப் பரவி வருகிறது.

    கத்தி, துப்பாக்கி பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சர்ச்சையில் சிக்கும் விஜய்:

    சர்ச்சையில் சிக்கும் விஜய்:

    சமீபகாலமாக விஜயின் படங்கள் ரிலீசுக்கு முன்னதாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்தவகையில், இப்படத்தின் போஸ்டரில் விஜய் கையில் சிகரெட் வைத்திருப்பதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

    விஜய்க்கு நோட்டீஸ்:

    விஜய்க்கு நோட்டீஸ்:

    இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை விஜய் மற்றும் முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போஸ்டரை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது.

    வைரலாகும் கதை:

    வைரலாகும் கதை:

    இந்த சர்ச்சைகள் முடிவதற்குள்ளாக, சர்கார் படத்தின் கதை இணையத்தில் லீக்காகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தான் சர்கார் படக்கதை என சமூகவலைதளத்தில் ஒரு கதை வைரலாகப் பரவி வருகிறது.

    ரஜினியின் சிவாஜி:

    ரஜினியின் சிவாஜி:

    அந்தக் கதையானது ஏறக்குறைய ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தை டிங்கரிங் பார்த்தது போல் உள்ளது. அதாவது சிவாஜி படத்தில் வெளிநாட்டில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தோடு தமிழகம் வந்து சமூகசேவை செய்ய விரும்புவார் ரஜினி.

    அரசியலில் குதிக்கும் விஜய்:

    அரசியலில் குதிக்கும் விஜய்:

    அதேபோல், சர்கார் படத்தில் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருக்கும் விஜய், அங்கு சம்பாதித்த பணத்தை, தன் சொந்த ஊரின் நலனுக்காக செலவிட விரும்புகிறார். ஆனால் அதற்கு ஏற்படும் இடையூறுகளைத் தொடர்ந்து, அவர் அரசியலில் குதித்து எதிரிகளை துவம்சம் செய்கிறார். இது தான் சர்கார் படக்கதை என்கிறது அந்த பார்வேர்ட் செய்தி.

    வெயிட் அண்ட் ஸீ:

    வெயிட் அண்ட் ஸீ:

    கூடுதலாக கூகுளில் வேலை செய்யும் தமிழரான சுந்தர்பிச்சை கதாபாத்திரம் போன்று விஜயின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் நிஜம் தானா அல்லது வழக்கம்போல் நெட்டிசன்களின் குறும்பா என்பதை சர்கார் பட ரிலீசுக்குப் பிறகு தான் தெரிந்து கொள்ள இயலும்.

    English summary
    A story line of actor Vijay's Sarkar, directed by A.R.Murugadoss is now viral in social networks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X