Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
’மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம்’..டிச-9 -ல் வெளியாகும் ‘விஜயானந்த்’பான் இந்தியா திரைப்படம்
நான்கு
தலைமுறையைச்
சேர்ந்த
குடும்ப
உறுப்பினர்களுக்கு
இடையேயான
உணர்வுகளை
விவரிக்கும்
திரைப்படமாக
இந்த
'விஜயானந்த்'
உருவாகி
இருக்கிறது.
முன்னனி
லாரி
போக்குவரத்து
நிறுவன
அதிபரின்
கடின
உழைப்பை
இளைஞர்களுக்கு
காட்சிப்படுத்தும்
படமே
விஜயானந்த்.
சூரரைபோற்று
போல்
இதுவும்
உழைப்பால்
உயர்ந்த
ஒருவரின்
வாழ்க்கைக்குறித்த
மோட்டிவேஷனல்
பிக்சர்
ஆகும்.
கன்னட
சினிமாவில்
அடுத்த
பான்
இந்தியா
பிரம்மாண்டம்…
விஜயானந்த்
ட்ரெய்லரை
வெளியிட்ட
படக்குழு

5 மொழிகளில் வெளியாகும் விஜயானந்த்
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.

சென்னையில் நடந்த பட அறிமுகவிழா
'ட்ரங்க்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'விஜயானந்த்' திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதன் போது படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பட உலகினரின் கோரிக்கையை ஏற்ற படக்குழு
படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், '' கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பை பார்வையிட்ட திரையுலக பிரபலங்கள், இந்த திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கலாமே..! என ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படமாக தயாரானது. தற்போது 'விஜயானந்த்' திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகிறது.

மணிரத்னத்தின் தீவிர ரசிகையான படத்தின் இயக்குநர்
நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் வெளியான 'குரு' திரைப்படத்தை பார்த்த பிறகு தான், சுயசரிதை திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் இந்தத் திரைப்படம் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம். நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமாக இந்த 'விஜயானந்த்' உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்காலம் குறித்த கனவை காண வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத் தருகிறது.

46 ஆண்டு கால கடின உழைப்பில் உருவான நிறுவன வரலாறே விஜயானந்த்
1976 ஆம் ஆண்டின் ஒரேயொரு வாகனத்துடன் தொடங்கிய இவரது கனவு, இன்று இந்தியா முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுடனும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களுடனும் வளர்ச்சி அடைந்து, அவரை சாதனை நாயகனாக்கியிருக்கிறது. 'விஜயானந்த் ரோட் லைன்ஸ்' என்ற அவரது நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 'விஜயானந்த்'தை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். 'விஜய்' என்றால் 'வெற்றி', 'ஆனந்தம் என்றால் சந்தோஷம்'. படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதளவில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இந்த திரைப்படம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.

இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் லாரி நிறுவன அதிபர்
படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பேசுவையில், நான் ஒரு வயதாக இருக்கும் போது என்னுடைய தந்தை விஜய் சங்கேஸ்வர் குடும்பத் தொழிலிலிருந்து விலகி, வி ஆர் எல் எனும் இந்த வாகன போக்குவரத்து துறையில் 1976 ஆம் ஆண்டில் ஈடுபட தொடங்கினார். தற்போது நாங்கள் ஏழு லட்சம் தொழில் முறையிலான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1500 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். தமிழகத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

99% உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளோம்- இயக்குநர்
இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் ரிஷிகா சர்மாவும், நாயகன் நிஹாலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் தந்தையை சந்தித்தனர். 30 நிமிட சந்திப்பு என்று கூறி தொடங்கிய இவர்களது பேச்சுவார்த்தை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்பு சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளை சொல்லலாம்.'' என்றார்.

தன்னம்பிக்கையற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டும் படம்
கடைக்கோடியில் வாழும் பாமர மனிதனுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது? என்று தெரியாமல், தன்னம்பிக்கையிழந்திருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து ஒருவர் எப்படி வென்றார் என்பதை நான்கு தலைமுறைகளை சம்பந்தப்பட்ட கதையாக தயாராகியிருக்கிறது. நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்த படத்தில் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த படத்தில் நிறைய செய்திகள் இருக்கிறது.'' என்றார்.

நாயகன் நிஹால் பேச்சு
நாயகன் நிஹால் பேசுகையில், '' இந்த விஜயானந்த் திரைப்படம் நான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம். விஜய் சங்கேஸ்வரை சந்தித்தவுடன், 'உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறோம்' என சொன்னோம். ஒரு நிமிடம் அமைதி காத்தார். 'நான் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனும் அல்ல. பிரபலமான திரைப்பட நடிகரும் அல்ல. பிறகு ஏன் என்னுடைய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார். உங்களின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரணம் நட்சத்திரமாக இருக்கிறீர்கள்.' என பதிலளித்தோம். அதன் பிறகே அவர் சம்மதித்தார்.. படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்" என்றார்.