Just In
- 7 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 38 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- Sports
1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட்டி ஸ்டோரி பாட்டை கேட்ட சிம்பு.. என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் அருண்ராஜா காமராஜ் ட்வீட்!
சென்னை: தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை கேட்ட சிம்பு, பாட்டு சூப்பரா இருக்கு என பாராட்டியுள்ளதாக பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் ட்வீட் போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்பு, தனுஷ் மற்றும் விஜய் உள்ளிட்ட சில நடிகர்களே தாங்கள் நடிக்கும் படங்களில் பாடல்களையும் பாடி வருகின்றனர்.
வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்கான வேலைகளில் பிசியாக உள்ள நடிகர் சிம்பு, மாஸ்டர் பாடலை கேட்டுவிட்டு, நல்லா இருக்கு என தெரிவித்துள்ளது தளபதி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மாஸ்டர்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், செளந்தர்யா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து டிரெண்டிங்
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் குரலில் தங்லீஷ் பாடலாக வெளியான குட்டி ஸ்டோரி பாடல், 11 மில்லியன் வியூக்களை கடந்து தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

செம்ம ரெஸ்பான்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக மாஸ்டர் பாடல் அமைந்துள்ளது. 3000 கார்ட்டூன் புகைப்படங்கள், அந்த லிரிக் வீடியோவுக்காக வரையப்பட்டுள்ளன. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான லோகி தான் இந்த பாடல் டிசைனுக்கு மூலக் காரணம் என ரத்னகுமார் தெரிவித்துள்ளார். குட்டி ஸ்டோரி பாடலுக்கு உலகளவில் செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
|
சிம்பு பாராட்டு
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை கேட்ட பல பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதன் வரிகளை பகிர்ந்து ட்வீட் போட்டிருந்தனர். வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் செம்ம பிசியாக இருக்கும் நடிகர் சிம்பு, குட்டி ஸ்டோரி பாடலை கேட்டு சூப்பராக இருக்குன்னு சொன்னார் என அருண்ராஜா காமராஜ் ட்வீட் போட்டுள்ளார்.
|
ரசிகர்கள் நன்றி
நடிகர் சிம்பு, குட்டி ஸ்டோரி பாடலை கேட்டு பாராட்டியுள்ளார் என்ற தகவல் அறிந்த தளபதி ரசிகர்கள், சிம்புவுக்கும், அவரது நடிப்பில் உருவாக உள்ள மாநாடு படத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குட்டி ஸ்டோரி பாடலில் இருக்கும் பாசிட்டிவிட்டியான வரிகளை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
|
எஸ்.டி.ஆர் டா
எஸ்.டி.ஆர் குறித்து அருண்ராஜா காமராஜ் ட்வீட் போட்டுள்ள நிலையில், சிம்பு ரசிகர்கள், தலைவன் எஸ்.டி.ஆர் டா எப்பவுமே மாஸ் டா என கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். மேலும், சீக்கிரமே, சிம்புவை வைத்து ஒரு செம்ம மாஸான படத்தை பண்ணுங்க ப்ரோ என அருண்ராஜா காமராஜுக்கு ரெக்வஸ்ட்டும் வைத்து வருகின்றனர்.

தளபதி 65
சமீபத்தில், தளபதி விஜய்யின் 65 படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. குட்டி ஸ்டோரி பாடலை இவர் எழுதியுள்ள நிலையில், அடுத்த படத்தை இவர் இயக்குவாரா? என்ற சந்தேகமும் ஸ்ட்ராங்காக கிளம்பியுள்ளது. கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடி மிரட்டிய அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கி இருக்கிறார்.