STR: இந்த தீபாவளி நம்ம பசங்களுது.. 'அரசன்' சிம்புவின் அட்டகாசமான வாழ்த்து!

சென்னை: இந்த தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. அதாவது த்ருவ் விக்ரமின் பைசன், ஹரீஷ் கல்யாணின் டீசல் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற, சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நாளை அதாவது அக்டோபர் 17ஆம் தேதி மூன்று படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த மூன்று படங்களின் கதாநாயகர்களும் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்கள். அதாவது நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரமிற்கு பைசன் படம் தான் மூன்றாவது படம். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, லால், அமீர் என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது தனி அபிப்ராயமே ஏற்பட்டுள்ளது.

STR Silambarasan Wishes Diwali Release Movies Bison Dude And Diesel Success

அதேபோல், இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு நடிகராக இந்த படம் தான், மூன்றாவது படம். அதாவது டியூட் படம் தான். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கிறார் சாய் அபயங்கர். படத்தில் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஜூனியர்களில் சீனியர்: அதேபோல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு படம் டீசல். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மேலும் படத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்கள் மூவரில் ஹரிஷ் கல்யாண் தான், கொஞ்சம் சீனியர். இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே கடைசியாக வெளியான ஹரீஸ் கல்யாணின் பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்கள் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இதனாலே டீசல் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.

STR Silambarasan Wishes Diwali Release Movies Bison Dude And Diesel Success

சிம்பு வாழ்த்து: இப்படி இருக்கையில் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த மூவருக்கும் மூன்று படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிவுரையும் கூறியுள்ளார். அதாவது அவர், " இந்த தீபாவளி நமது இளைஞர்கள் உடையது. டீசல், டியூட் மற்றும் பைசன் என மூன்று படங்களும் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாகி உள்ளன. ஒப்பிடுவதை விட்டுவிட்டு தமிழ் சினிமாவைக் கொண்டாட பழகுவோம். தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருப்பவர்களை, தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருப்பவர்களை ஆதரித்து, தமிழ் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம். அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். தீபாவளி வாழ்த்துகள் " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசன் புரோமோ: இது மட்டும் இல்லாமல், இன்று சிலம்பரசனின் அரசன் படத்தின் புரோமோ தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாளை இந்த புரோமோ யூடியூப் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X